1.
காட்டில்
அறத்தோன் இல்லை
தனித்த ஒரு மீன் கொத்தியின்
பாடல் மட்டுமே உள்ளது
2.
வானேறவோ வழிந்தோடவோ
நிரம்பித் தவிக்கிறது
நிறைவிளக்கு
சுடர் எரியும் திசை
என ஏதுமுண்டா
3.
காற்றென
இவ்வுலகனைத்தையும்
முத்தமிடுவேன் நான்.
இவ்வுலகு என்னையும்.
4.
என்னிடமுள்ளது
நம் கண்ணீர்
எந்த விளக்கு மாடத்தில்
ஏற்றி வைத்தால்
நமக்கு அது எட்டும்?







