• புதினா இலைகள்

    மலர்களை போல் அல்ல தோட்டத்தில் உள்ள புதினா இலைகள் தண்டுகளை ஒடிக்காமல்அவற்றை கிள்ளி எடுப்பது எளிதல்லஎடுத்ததை எடுத்த இடத்திலேயே வைக்கும்பொறுப்பான கைகளுக்கேஅது சாத்தியம்

    Continue reading →: புதினா இலைகள்
  • கானகத்தின் கற்துண்டு

    நான் புகைவதன் நறுமணம்உன்னைஅமைதியில் ஆழ்த்துகநான் எரிவதன் நறுமணம்உன்னைஉறங்க வைப்பதாகுககானகத்தின் கற்துண்டு நான் காணாமலாவதன் கற்பூரம்உன்னைகண்டு கொள்வதாக. 

    Continue reading →: கானகத்தின் கற்துண்டு
  • அலங்கோலமாய் ஆகிவிட்டகல் மேல்ஓடி தீர்ந்து விட்டிருந்ததுநதி

    Continue reading →: நதி
  • என் கைப்பள்ளத்தில்நீர் அருந்தும்உன் நாக்கில் ஓடுகிறது நம் நதி

    Continue reading →: என் கைப்பள்ளம்
  • ஆக்கியவன் கைகளில் குழிந்தேன்

    அன்னம் செய்விக்கும்அருங் கலமென அமைந்தேன்மண்ணை உந்தி சுழித்தேன்ஈரப்பசையால் என் ஆயுள் கொண்ட மட்டும்மண்ணையெல்லாம் இழுத்துப் பிடித்தேன் உலைமேல் காய்ந்து கொதித்துவாய்விளம்பி நிறைந்தேன்காலம் வந்ததும்மண்ணொடு மண்ணானேன்அமையும் முன்எதற்கும் நிற்காதஎங்கும் சென்று சேராதஒரு சக்கரத்தில்பலகாதம் சுற்றிய பிறகேஆக்கியவன் கைகளில் குழிந்தேன்அன்றி அவன் கை குழிந்ததோ?

    Continue reading →: ஆக்கியவன் கைகளில் குழிந்தேன்
  • எழுந்திடுக மகவே

    இரவின் ஈரப் பட்டாகையில்வர்ணவேடிக்கை ஓய்ந்தது தோல் பூத்த களிற்றின்பிளிறலோசை மங்கியது உறங்கும் உலகின் மேல்பாலை விடிந்தது எழுந்திடுக மகவே

    Continue reading →: எழுந்திடுக மகவே
  • ஜென்ம வாசனை

    உன் முகம் ஒரு குழிக்குள்தன் மூக்கை நுழைத்திருந்தது.ஜென்ம வாசனையால் உந்தப்பட்டு புராதானமான அந்த பணிக்குள்தன்னைமேலும் ஆழமாக செலுத்தியது  தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையில் நிற்கும் ஒரு அதிகாரியை போலநான் உன் பின்புறம் நின்றேன்நல்லவேளைஉன் முதுகிலிருந்து நம் ரகசிய தந்திக்கம்பி வேலை செய்ததுஅது மேல் நோக்கி எழும்பி நின்றது..ஆம்.. இங்கு தான்….நெருங்கி விட்டோம்……இல்லை… இது இல்லை….அவரசத்தில் வலமும் இடமும் தொடாமல் ஆடியதுஇப்போது இடம்வலமாக மெல்ல அசைகிறது…எப்படி தப்பித்திருக்க முடியும் ..?மீண்டும் விரைத்தெழுகிறதுஇதோ.. இங்கு..அசைவே இல்லாமல் உறைந்திருக்கிறது……….. தந்தி ஒரு…

    Continue reading →: ஜென்ம வாசனை
  • வீட்டின் மேலொரு விளக்கு

    ஆதியில் இருளும் தூசுமாய் இருந்ததுதனித்திருக்க பயந்துஒருவருக்கொருவரை அணைத்தபடிஒரு வீட்டை செய்தனதூசுகள்வீட்டை ஒளியூட்ட ஒரு விளக்கு இல்லாமையால்உலகே இருண்டிருந்த ஒரு நாளில்வீட்டின் மேலோரு விளக்கை செய்தனவீட்டை துறந்த தூசுகள்

    Continue reading →: வீட்டின் மேலொரு விளக்கு