கிடத்தப்பட்ட உன் பாதங்களே எனக்கு முகம்


9

ஒவ்வொரு முறையும்
நான் வருவதற்கு முன்பே

யாரோ
உன் பாதங்களை
காயப்படுத்தி விடுகிறார்கள்

நீயோ
விளையாட்டென
அவர்களிடை வைத்துக் கொள்கிறாய்
உன்னை

உன்
கால் தடங்கள் கண்டு
வழி தேர்வது
எத்தனை கடினம் என்பதை
நீ புரிந்து கொள்வதேயில்லை

10

மலம் என்ற சொல்லிலிருந்து
ஒரு கை அள்ளுமோ
சொல்

11

தலை வெட்டி
எடுத்து செல்லும்
அவர்கள்
அறியமாட்டார்கள்

கிடத்தப்பட்ட உன் பாதங்களே
எனக்கு முகம்