கூழாங்கல் ஆக விரும்பினேன் நான்


6

காட்டுக் கொடிகளாலான
இந்த  கூடையை
கொடுக்க வேண்டியே
நான் வந்தேன்.

திறந்து பார்க்கும் போது
நீ எடுக்க
இரண்டு இனிப்பு துண்டுகள் கூட வைத்தேன்.

திறந்து பார்க்கும் போதும்
நீ
அந்த கூடையை
பார்க்கவில்லை

7

ஒரு கூழாங்கல்
ஆக விரும்பினேன் நான்

மழுங்கியது.
ஆயினும்
கூர் முனை ஏதுமில்லாதது

நாள்தொறும்
ஆற்றில் கிடந்து பார்த்தேன்

என் கூழாங்கல்
அங்கு கிடக்கவில்லை

ஏனில்
மண்ணில்
நான்
உப்பாயிருக்கிறேன்