முத்தமிடும் நேர்கோடு



13


சொற்கள்
மன்றாட்டுக்கென
விளையாட்டுக்கென
நீ அளித்த பாவைகள்

இறைவனுக்கரசே
நம் பாவைகள் மேல்
பொருட்களை ஏற்ற வேண்டாமென
எம் பெரியோரிடம் சொல்வீரா?

14

வளைந்து வளைந்து
செல்லும் நேர்கோடு
வழியில்
நிறுத்தி நிறுத்தி
முத்தமிடுகிறது
பார்க்குமனைவரையும்.

15

தூரத்தில்
கருப்பும் சிவப்புமான ஒரு பொட்டு
மும்பரமாய் வேலை பார்த்துக் கொண்டிருந்த
பூச்சி மருந்து மெசினை
சுற்றி சுற்றி பறக்கிறது

குளவியாய் இருந்தால்
கூடு கட்ட
ஓர் இடுக்கு தேடலாம்

தேனீயாய் இருக்காதென
சொல்வதற்கு
இன்னும் அவ்வளவு நெருக்கமாக செல்லவில்லை
நான்