16
திடுமென
எதிர் வருவோரை காட்டி
யாரிவர் எனக் கேட்டாய்
தடுமாற்றத்தில் நான்
தெரியாதென பொய் சொன்னேன்
17
இரவின்
முடிவிலா ஆடியில்
தன்னைத்தான்
சிமிட்டுகிறது
மின்மினி காடு
18
ஆளற்ற தென்னந்தோப்பிற்குள்
தனித்து விடப்பட்டிருந்தது
ஒரு வாட்டர் ஆப்பிள்.
எடுத்து கடிக்கவும் மனமில்லை.
சிரித்து சிவந்த முகமோ
மிகச் சிறியது.
அதன் அம்மா
அருகில் இருப்பது போலவும்
தெரியவில்லை
காக்கையோ குருவியோ
தவற விட்டதென்றால்
கொடுத்தனுப்ப வேண்டியதுமில்லை
கூட கூட்டி போகவும் வழியில்லை.
வீடென்றால் அதற்கு புழுக்கம் உண்டாகலாம்.
யாரிடம் கொண்டு சேர்ப்பது
நம்
செல்ல குட்டியை