20
இத்தனை ஆயிரம்
நாவுகளால்
நக்கி விடுகிறது மரம்.
துவட்டிக் கொள்ள
மற்றுமொரு மரத்திடம்
ஓடிச் செல்கிறது
காற்று
21
என்
முதுகில்
முடியடர்ந்த
உன் வால் வேண்டும்
ஒருமுறையேனும்
நானதை
ஆட்டிப் பார்க்க வேண்டும்
22
ஆம்
இங்கு எதுவுமிலை
எது வரினும்
அதுவுமிலை
தேம்பியழுது
காற்றிலென்
கூந்தலாடவே
வந்தேன்.
எனக்கிங்கு ஏதுமிலை
23
நெடுநேரம்
நம் சொற்கள்
அங்குமிங்கும்
இங்குமங்கும்
ஓடியதில்
நாம் பேசி கொள்ளவில்லை
தனித்து
வரும் வழியிலொரு தொடுகை பேசி கொண்டோம்







