19
அம்மாவுக்கும் அவள் அம்மாவுக்கும் அம்மாவானவர்கள் எல்லோருக்கும் வந்தது அவர்களை ஆள் செய்விக்கும் ஓராள்.
டேய். அதை அம்மா சொல்ல வேண்டும். அன்றெல்லாம் என்னோடு விளையாடியவன் நீ.
நமக்கு ஆள் என நாம் இங்கு வந்தோம். அதையொன்றும் நாம் மறைக்க வேண்டியதில்லை.
மற்றும் இந்த கதையோடு நீ சேர்வது எனக்கு பிடிப்பதில்லை. அவனுக்கு நிறைய புழுகினிகளே நண்பர்கள். நாம் அப்படியா?
நின்னோராவில் நமக்கு உண்மையும் பொய்யும் சொல்லத் தெரியாது. பூமியில் கெட்டு போகாத எதுவுமே இல்லை. நீயின்று பூமியிலிருக்கிறாய் மறந்து விடாதே.
போகும் போது நீயிங்கு எழுதியதை நின்னோரா எடுத்து செல்ல வேண்டும். அதில் உண்மையோ பொய்யோ இருந்தால் நம்மவர்களுக்கு புரியாது.
இனி இதையும் நானே கண்டு சரி செய்ய வேண்டுமா? எல்லாமே என் தலையிலேயே விழுகிறது. அமுதும் உப்பும் கடைந்து அதை சட்டியில் ஆக்கி வைத்து இப்போது நானே உங்களுக்கு ஊட்டியும் விட வேண்டுமா? இந்த பூமிகாரர்களுக்கு எல்லாமே இன்னொருவன் ஊட்ட வேணும். அவனவன் கையிலெடுத்து மென்றால் என்ன?
20
ஆம். அம்மாவான அவர்களுக்கு வேலை. அவனுக்கு விளையாட்டு. யார்தான் செய்யவில்லை வேலை? அவன் பூமிக்கு புதுசு. அப்புறம் சின்னஞ்சிறியவன். பாலகன்.
கொஞ்சம் அத்தியாயம் கடந்தால் எல்லாம் சரியாகி விடும். கதையோடு சேர்ந்ததில் கொஞ்சம் மழுங்கி விட்டான். இனி அந்த கதைப்பயல் இந்த வாசலை மிதிக்கட்டும். அவன் காலை உடைக்கிறேன்.
சரி இதையே பார்த்து படித்து வேறெங்கும் போகாமல் எங்களுடன் சுற்றுகிறீர்களே. உங்களுக்கெல்லாம் என்ன வேலை இங்கே?
அங்கே இது மாதிரி வண்ணம் பொறிக்க பட்ட தாள்களை பாண்டங்களில் ஒட்டினால் எத்துணை அழகாய் இருக்கும். ஒன்றிரண்டை விற்கவும் செய்யலாம்.
போகட்டும். இருந்து கேட்டுவிட்டே செல்லுங்கள். பிறகு இது உங்களுக்கு கிடைக்காது போகலாம். திரும்பும் போது இதை நான் நின்னோரா எடுத்து செல்லலாம் என்றிருக்கிறேன்.
அங்கே இது மாதிரி வண்ணம் பொறிக்க பட்ட தாள்களை பாண்டங்களில் ஒட்டினால் எத்துணை அழகாய் இருக்கும். ஒன்றிரண்டை விற்கவும் செய்யலாம்.








One response to “குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 6”
[…] அடுத்து […]