விசும்பின விசும்புகள்

24

காலை போதில்
தினம் உன் பிரகாரம்
வந்து நிற்கிறேன்

தகிக்கும் வேளை
நோக்கித் தீரவில்லை
உன் நிர்வாணம்

அந்தியில்
ஏக்கமும் துயரமுமாய்
வீடு திரும்புகிறேன்

திரை மூடிய
யாமமறியாமல்
நாம் கூடினது வெளி

வைகறை
நாம் எழுந்தருள்வது
உன் கருவறை

25

இருளில்
தன்னை
இலையிலையாய்
சொட்டித் தீர்க்கிறது
மரம்