நான் நிறுத்துவேனிலை

 27

சப்பிய
உன் முலைகளை
நான் விட்டுத் தருவேனிலை

உன் காதற் காமம் பட்டு
ஆடிய என் குழைகளை
நான் நிறுத்துவேனிலை

மயிரடர்ந்த
நின் திருமேனிகண்
கண் எடுத்தேனிலை

முயங்கும் நம்மேனி
கண்பார்க்கும் ஆளையும்
நான் தடுத்தேனிலை

28

அற்புதமான கற்கள்
பார்க்க அரியது
யாரோ பேசிக்கொண்டிருந்தனர்

அற்புதம் இல்லாத
கற்களையே
நான்
இன்னும் பார்க்கவில்லை

29

காட்டு மலர்க் களைகளை
நோக்குங்கள்
அவற்றிற்கும்
உங்கள் இறைவன்
அணி செய்கிறார்

30

காலதூரம் தள்ளி
காத்திருக்கும்
முடிவிலிக்குத்
தின்னக் கொடுக்க
இந்த மரத்தின்
கனி
மரமும்
கனியுமாகி
செல்கிறது