இனித்து கிடந்தது ஒரு பாம்பு

31

இன்று
எதையுமே எழுதவில்லை

எழுதாமல் காட்டுகிறேன்.
பார்க்கவில்லையா நீ?

32

வாக்கிங்
என்ற வார்த்தை

உன் வாலை
இப்படி ஆட்டுமென

காற்றில்
உன்னை
இப்படித் தூக்கிச் சுழற்றுமென

சொல்லும் முன்பே
நான் அறிவேன்


33

ஒன்றன்பின் ஒன்றாக
வண்டிகள் விரைந்தன

சாலையில்
சக்கையாக
இனித்து கிடந்தது
ஒரு பாம்பு

34

அடுத்த முறை
அந்த குருவியை
பார்க்கும் போதும் சொல்வேன்

நாளும் நான்
வீட்டுத் தரையில்
தலை சிலிப்பி
உன்னைக் காட்டிலும்
இறகுகள் உதிர்ப்பேன் தெரியுமா?