குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 9

25

வீட்டிற்கு வந்து விட்டாளா நம்மவள்? யாரேனும் அவளை பார்த்தீர்களா?

அவள் கண்களை பார்த்தீர்களா? நான் பொறுக்கி வரும் அழகியவொரு தானியமல்லவா அது?

அவள் மூக்கை பார்த்தீர்களா?

நான் ஏறி சருக்கியாடும் மணல் மேடல்லவா அது?

அவள் கொவ்வாய் பார்த்தீர்களா?

நான் கொண்டு வரும் அரியகனியல்லவா அது?

அவள் விரல்களை பார்த்தீர்களா

நான் மென்றுவரும்  நுனிபுல் அல்லவா அது?

அவள் பொன்கேசம் கண்டீர்களா

நான் குட்டி வைத்து வாழும் வீடல்லவா அது?

ஓ…அவள் பாதங்கள் பார்த்தீர்களா?  நான் ஊர்ந்து விளையாடும் ஒரு ரோஜாப் பூவல்லவா அது?

அய்யோ….அவள் மேனியை பார்த்தீர்களா?

நான் சுற்றி பறக்கும் பொன் பூத்த மலைக்காடுல்லவா அது.

ஏய்…அவள் சிறு நீர் கண்டீர்களா? நான் குடித்து  நிறையும் அமிழ்தகுளமல்லவா அது.

டேய்…அவள் குருதி யாரேனும் கண்டீர்களா?

நான் சுவைத்து மிகிழும் இன்னுணவல்லவா அது.

என்ன அங்கே சத்தம்.. தினங் காலை அந்த மலை நடுவிலிருந்தெழும் நான் கண்ணார காணும் கண்ணல்லவா அவள்..

நான் ஓய்ந்து உறங்கும் வேளை என் கண்ணே வந்து தண்ணனைத்துறங்கும் என் சேமக்கண் அல்லவா அவள்..

அறிக இங்குள்ளோர்..

அவளை வருத்துவோரைக் காய்வேன். அவளை பேணுவோரை முத்திக் குளிர்வேன்.

அறிக….

என்னவளுக்கு

என் கண்காணிப்பே காப்பு.

தனி

வேடிக்கை பார்த்து நிற்பவர்களே!!                                                       

வானம் இவளை தினம் பாரத்து அந்த மாட்டுக்கு அங்கிருக்கிறது. இவளேயொரு வானவேடிக்கை அன்றோ? 

மாறி மாறி வேடிக்கை பார்த்து கொள்வதில் தானே வேடிக்கை. மாறாதிருப்பது தன்னை வேடிக்கையாக வைத்துக் கொள்வதில்லை. 

அங்கே வேடிக்கை பார்ப்பது மழுங்கிய என் கண்மணி அல்லவா ? 

கூர்ந்த பார்வையோ அக் கண்மணியை அழ செய்வதல்லவா? 

உங்கள் கண்மணிகளை திறந்து பாருங்கள். அவை வெளியில் அலையட்டும்.. அவைகளை மூடி வைக்காதீர்கள். ஏனெனில் உங்களையும் உலகையும் நீங்கள் இருட்டாக்குகிறீர்கள். 

வேடிக்கை யென்பது வெளியில் இருந்து உள்ளே வருவதா இல்லை உள்ளேயிருந்து வெளியே பார்ப்பதா? 

உள்ளேயும் வெளியேயும் ஒன்றென பார்ப்பதல்லவோ உண்மையான வேடிக்கை.

அடுத்து

One response to “குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 9”