ஒரு டைப்பான ஆடுகள்

39

சிறு விளக்கொன்றை
பொருத்தி வைத்தபடி
நிலத்தில்
தூங்காது
கண் விழித்திருக்கிறது
கிணறு


40

ஆடு என அடித்தேன்
பிரிய மனமில்லாமல்
ஆட்டை ஒட்டி நின்றது
ஒரு கோடு

கல் என அடித்தேன்
ஆட்டிலிருந்து
ஒரு கல் தொலைவில் இருந்தது
கோடு

இடைவெளியின்
ஒரு அழுத்தில்
அங்கு வந்து நின்றது
ஒரு டைப்பான ஆடுகள்

41

ஓய்ந்த வொரு வேளை
எங்கும் களி அமைதி

குரலெடுத்து இசைக்கிறேன் நான்

குரல் தீர்ந்து
மீண்டுமொரு துளி அமைதி

கதறலெடுத்து இசைக்கிறேன் இம்முறை.

கதறலொயும் தருணம்
பெருங் கருணையெடுத்து இசைக்கிறேன்.

எல்லாம் ஓய்ந்தது.
இனி எடுக்க தேவை ஏதுமிலாது
முகிழ்த்தது அது.