42
ஓடிக் கிடந்ததோர் மேனி
கூடிச் சுடர்ந்ததோர் மேனி
கருநீலப்பச்சைக்காலம்
வண்ண கலந்ததுவோ
வடிவ கலந்ததுவோ
மாசும் மணிதிகழ் தூசும்
மண்ணு கலந்ததுவோ
வற்றாத உன் வாணி.
43
ஞாலப் போந்தாயோ
அடர்வானில்
தொலையப் போந்தாயோ
நேரமிதென
மறக்க போந்தாயோ
தூரமிதென
தூங்கப் போந்தாயோ
பசுங்கிணற்றின்
பாழ் அடியில்
எனை காணப் போந்தாயோ
காலை வந்ததென் கோவே
கதிர்காமங் கொண்டு
எனை தீண்டப் போந்தாயோ
44
வெட்டவும்
தப்பியோடவும்
தேவையில்லாத ஒரு சதுரம்
கருப்பு
வெள்ளை
நிறத்திலிருந்தது அக்களத்தில்







