50
அம்ம!
பைதல் பசுஞ்சுடர் ஏற்றி
கண் வளர்க்கும்
மண்ணில் குழித்து நாம்
மஞ்சஞ் சேர்த்த
கதலிக்கன்று
51
(இதழ் ஒன்றில் பிரசுரத்திற்காக இருப்பதால்
இங்கு வெளியிடப்படவில்லை.
இதழில் வெளியானதும் இங்கு அளிக்கப்படும்.
மன்னிக்கவும்)
52
வெண்ணிற
ரப்பர் கொண்டு
அழி அழி யழியழி யழி என
அழித்தேன்
எனை நான்
அழித்த பிறகு
என்மேல் கிடந்தது
அவ்வளவு அழுக்கு ரப்பர்
ரப்பரில் ஒட்டியிருந்தேன்
ஒரு துளி நான்







