குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 15

39

அணிலென அக்காலை அவன் திரும்பி வந்ததும் அவள் மகிழந்து நின்றிருந்தாள். அவனை கை பிடித்து அழைத்துச் சென்றாள். கிட்டத்தட்ட ஓடினாள்.

ஒரு பெரும் மலர்வனம் ஒன்றினுள் அவனை அழைத்து சென்றாள். எண்ணிலடங்கா பூக்கள் மலர்ந்து நின்றிருந்தன அங்கு.

இதில் ஏதொரு பூ வேண்டுமென்றாலும நீ பறித்துக் கொள்க.  உனக்குரியது அது.

நீ பறிக்கும் அந்த ஒற்றை பூ எதுவாயினும். அது மரமாகும். பூ மட்டுமே நிறையும் அதில். அப்பூவிலொன்று கூட வாடாது என அறிக.

என்றுமழியாத பூவா? எனக்கா?

ஆம் அவ்வகழின் கண்ணீரில் வளர்ந்து வந்தவை இவையனைத்தும்.

வனம்  முழுக்க நடந்த அவன் ஒரு சிறிய நெருஞ்சிப் பூவை கையிலெடுத்துக் கொண்டான். இவனை நான் நின்னோரா கொண்டு செல்லவிருக்கிறேன்.

அந்த பூவிடம் அவன் சொன்னான். இனி உன் பழங்களுக்காக நீ வருந்த வேண்டாம் என் செல்லமே..  உனக்கு இனி விரும்பிய வண்ணம் மலர்வதொன்றே பணி.

40

விடை பெறல் நாடகம்

இறுதி காட்சி

அவள் : சரி எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. பூமியில அமைதி வந்தாச்சு. நாம நின்னோராக்கு திரும்பலாமா?

கதை : க்கும்.. நீங்க வரதுக்கு முன்னாடியும் பூமி அமைதியாத்தான் இருந்துச்சு.  கதை இல்லாதவங்கள எல்லாம் இங்க விட்டா இப்படித்தா ஆகும்.

அவள் : கவலபடாத கதையே.  போறதுக்கு முன்னாடி உனக்கும் ஒரு பரிசு வச்சிருகேன். (அவள் அந்த குறிப்பட்டை கதையிடம் நீட்டினாள்)

 கதை :  கதையா? எனக்கா? (நன்றி பெருக்கில் கதை கண்ணில் ரெண்டு மூன்று கவிதைகள் வடிந்தது) இத நான் என் தனி அலமாரியில வச்சுப்பேன்.

அவன்: சரி நேரமில்ல. நாம  கிளம்புவோம்.

கதை ( சிரித்த முகமாய் தன் கையை ஆட்டியபடி) : பத்திரமா போய்ட்டு வாங்க ப்ரெண்ட்ஸ்.

(கதை மகிழ்வுடன் கதைகளால் கட்டப்பட்டிருந்த தன் வீட்டிற்கு தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தது. திடீரென அங்கு சூறையாடப்பட்டு காலி நிலமாயிருந்த தன் வீட்டைக் கண்டதும் தாங்க மாட்டாமல் கதை அவ்விடத்திலேயே அமர்ந்து வீரிட்டு அழத் தொடங்கியது)

அங்குவந்த சிறு பெண் : கதை அங்குள் . ஏன் அழுவரீங்க. வீடு  போனா என்ன? அதான் இந்த புக் இருக்குல.. இத வச்சு வீட்டத் திரும்ப கட்டிரலாம்.

அவள் : (நின்னோரா செல்லும் வழியில் ) ய்ய்யா யா ஆ ஆ ஹ ஹா. இனி கதையோட கதை முடிஞ்சுது. அவன் கிட்ட இருக்கது நம்ம கதை மட்டுந்தான். அவன் கதையவே இனி அங்கிருந்துதான் ஆரம்பிச்சாகனும்.

   (திரை முடியது)

41

நின்னோராவிற்கு உடனே சீக்கிரம் கிளம்ப வேண்டுமென்ற ஆவலினால் புனைவிற்கு ஏற்ற காரணம்  இல்லாமலே நாங்கள் வந்த பெட்டியை கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று.

இம்முறை பெட்டி எம்பிய குலுக்கலில் நாங்கள் இருவரும் ஒருவர் மடியில் ஒருவர் உட்கார்ந்தோம். அல்லது அவரவர் மடியில் அவரவர் மடியில் உட்கார்ந்திருந்தோமா?

கொண்டுவந்த குறிப்பேடோ  அருகிருந்த காலி இருக்கையில் ஜன்னலோரம் கிடந்தது. அதில் பொறித்திருந்த வண்ணங்களை நோக்கிய படி நானிருந்தேன். நின்னோராவில் இந்த வண்ணத் தாள்களை என்ன செய்வது?

 நம் பக்கத்து வீட்டிலிருக்கும் அவளிடம் கொடுத்தால், அவளுடைய நரி பொம்மை போட்ட அழி ரப்பரை வாங்கி விடலாம்.

அடுத்து