தோல் துடித்தேன் நான்

1 

ஏதென்று அறியாமல்
அழுக ஆரம்பித்தேன்

நான் செய்த பிழைகள்
ஒவ்வொன்றாக
என்னிடம் வந்தன

இத்தனை பிழைகளா?
நான் பார்த்ததேயில்லையே

உலகில் உள்ளோர்
உலகில்
ஒரு அவரச வேலையென
அவர்கள் பிழைகளையும்
என்னிடம் விட்டு சென்றனர்

அவர்கள்
மனம் திரும்பி வரும் வரை
இந்த பிழைகளை
அழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
நான்

2

அமர்ந்த உன் கோலம்
கண்ட பிறகு
எனக்கு வேறு நினைப்பில்லை

உலகை மறந்து
நீயறியாமல்
ஒளிந்து வருகிறேன்
உன் அருகே

உனக்கு முன்பே
உன் முலைக்கண்
ஏறிட்டு
பார்த்து விடுகிறது
என்னை
 
அதற்கு முன்பே
தொட்டறிவேன் நானதை.

3

தோல் துடித்தேன் நான்
அறுக்கப்படும் என் தலையை எண்ணி

கண் அலைந்தேன் நான்
அறுக்க வரும் ஆளை எண்ணி

கால் உலைந்தேன் நான்
முடிவுறும் ஒன்றை எண்ணி


குருதி ஓடி முடிக்க எண்ணி
என்னில் அமைந்தது நான்