10
நிற்பதுவும்
நகர்வதுவும்
நடப்பதுவும்
பறப்பதுவும்
வாழும்
வீட்டில்
நான்
வரும் வழி இருக்கிறது.
வரும் வழியில் தான்
என் வீடுமிருக்கிறது
11
( இதழில் வெளியிட அனுப்பியதால் நீக்கப்பட்டுள்ளது.
வெளியானதும் இங்கு பிரசுரம் செய்யப்படும். மன்னிக்கவும்)
12
தூங்க மனமில்லாமல்
அப்பக்கமும் இப்பக்கமும்
சாடும்
மரத்தை
பொய் கோவத்துடன்
படுக்கையில் சாய்க்கிறது
காற்று







