13
அடைக்கப்பட்ட
போத்தல்
தண்ணீரிலிருந்து
மெல்ல
தலை காட்டுகிறது
ஒரு பசிய குளம்
14
பார்த்தாகி விட்டது
மங்கலான இப்பசுங்காட்டை
உற்சாகம் கொப்பளிக்கும்
இந்த மாலை இருளில்
நமக்கு
வேண்டியிருக்கிறது
சிறிது சிறிதாக
நிறைய
மஞ்சள் வெளிச்சமும்
யாரும் யாருடனும்
பேசும்
சிறிய சத்தமும்
15
இப்போதைக்கு
உன் உடலிலேயே
இருக்கட்டும்
அந்த வால்
உறைந்து நின்ற
உன் முன்
வந்ததும்
நானதை
ஆட்கிறேனே







