நான் அழித்த வல்லதும் கண்டு

16

அச்சம் கொண்டேன்

நான் அழித்த வல்லதும் கண்டு
அச்சங் கொணடேன்

நான் காத்த வல்லதும் கண்டு
அச்சங் கொண்டேன்

நான் பெற்ற வல்லதும் கண்டு
அச்சங் கொண்டேன்

என் வல்லதும் கண்டு
அச்சங் கொண்டேன்


17

நம்
அழுக்குகள்
நம்முடனேயே
வாழ விரும்புகின்றன

ஒவ்வொரு நாளும்
சுத்தமாக
நம்
கண்ணில் படாமல்
அகற்றி வைக்கப்படும் போதும்

அவை வாழ
தேர்ந்தெடுப்பது
நாமறியாத
நம் இடுக்குகள் தான்

அவை
நம்மைவிட்டு
விலகுவதுமில்லை
நம்
கை விடுவதுமில்லை

18

வானம்
உனக்குரியது

பெருங் கண்ணாடி ஜன்னலில்
நீ
வந்தமரும்
வானமும்
உனக்குரியது

உனக்கு போக
மீதமிருக்கும் வானம்
அத்தனையும்
எனக்குமுரியது