இறப்பை நான் விளையாடி பார்த்தேன்

19

தண்ணீர் குடித்து
சென்றன
இரு அணில்கள்

இம்முறை
தன்னை
குளமென
நினைத்து
பொங்கி பிரவாகித்தது
வெஸ்டர்ன் டாய்லட்

20

தன்னை மறந்து போயிருந்த
பெரிய கண்ணாடியில்
கண்ணாடி தனத்தை
கண்டு கொண்டது
குட்டி கண்ணாடி

ஓர் அபூர்வ கணத்தில்
குட்டி கண்ணாடியில்
தன்னை
பார்த்து விட்டது
பெரிய கண்ணாடி

21

இறப்பை
நான்
விளையாடி பார்த்தேன்

சுளுவில் முடிந்து விடுமாயினும்
நீட்டி விளையாடி
வெகுநேரம் களித்தேன்

வீடு அடைந்த
என்னை
காணாது
அழுது ஆற்றி நின்றனர் சுற்றோர்

களைப்பில்
மீண்டும்
நான் இறப்பை தூங்கி பார்த்தேன்