கண்டதும் கழிதும் பூத்து மிதந்தது
22

மரத்தில்
சல சலத்து
மிதந்தன
இலைகள்

சத்தங் காட்டாமல்
ஆகாயத்தில்
ஓடிற்று
ஒரு நதி

23

எங்கு செல்வதென அறியாமல்
தன் கை பிடிக்க ஆளிலாமல்
சாலை கடக்க முடியாமல்
முன்னுக்கு ஒரு தூரம்
பின்னுக்கு ஒரு தூரம்
தத்தளித்தது
யாரோ விட்டு சென்ற
ப்ளாஸ்டிக் பை

24

வறியார்
நிலத்தில்
கண்டதும்
கழிதும்
பூத்து
மிதந்தது
மடவார் குளம்