நேற்று மண்டிய கசடுகள்
28

நம் இரவு தங்கலிலிருந்து
எழுந்து
தினமும்
நாம் சுற்றிவரும் நிலத்தில்
ஒன்றுக்கு
மேலான இடங்களில்
பீய்ச்சியடிப்பது
நேற்று மண்டிய
கசடுகளை

29

குளிக்க வந்த இடத்தில்
ஒரு மீனை
தூக்கிக் கொண்டோடுகிறது
பறவை


30

உள்ளே செல்ல
பூட்டியிராத கதவை
திருகி திருகிப் பார்த்தது
சாவி

வெளியே வர
அடம்பிடித்து நின்றது
தாழ்