எங்கிருந்தோ வந்த குருதி
39

எங்கிருந்தோ வந்த
குருதியின் மேல்
ஒரு குருதி முளைத்தது

கிளைத்து படர்ந்து நின்ற
அதனடியில்
குருதி முளைக்காமல் பார்த்துக்கொண்டது

அக்குருதிமேல்
எங்கியிருந்தோ வந்து விழுந்தது
முளைக்குமொரு
துளியினும் துளி
பசுங்குருதி

40

மரம் போலாவர்
மரத்தின் அடி
அமர்ந்தவர்
நின்றவர்
போனவர்
வந்தவர்
புணர்ந்தவர்
அருந்தவர்