காத்து நின்றதன் எச்சம்
41

ஓசையில்லாமல்
கைகள் குவித்து
உடல் குறுக்கி
ஓர் ஓர் அடியாக
கால் வைத்து
விருட்டென பறந்தது
நாம்

42

நம்
சந்திப்பு புள்ளியில்

நீ
காத்து நின்றதன்
எச்சம்
பறந்து சென்றிருந்தது

நீ
பறந்து சென்றதன்
எச்சம்
காத்து நின்றிருந்தது