ஒக்கலிலிருந்து இறங்க இனி ஒக்குமா
59

எம்மோ மூச்சில் விளித்தோம் நுமை
உயிரிலினி உடல் நிக்க ஒன்னுமோ

அம்மோ வாச்சொல் பாடினோம் நுமை
வாயிலினி ஒருவாய் உண்ண ஒன்னுமோ

ஊசல் தொட்டு ஆட்டினோம் நுமை
எந்தோளிலினி நும்கை நிக்க வாருமோ

காலொடு கால் வைத்து ஆடினோம்
கால் இனி மண்ணில் வைக்க ஒக்குமா

பொம்மோ
பெருவெளி நிறைய வைத்தோம் நுமை
விசும்பிலினி வெளி நிக்க ஒன்னுமோ

மதலை என தேடிவருவோம் நும்முலை
ஒக்கலிலிருந்து இறங்க இனி ஒக்குமா