விண்கூத்தி
5

கூத்தி விண்கூத்தி
வினை வனையும்
குயவனொடு முயங்கிசிரிக்கும் கூத்தி

நினதாட்டம் அறிவேன்
நின்ற சோதி நின் உருவ நிழலறிவேன்

இயம்ப கொடிதெனினும்
இயம்புலதறிவேன்
வல்வினை எனக்கு வனைய தெரினும்
உனை ஓம்புதலறிவேன்

அறிவேன் அறிவென்று ஏதேதெனினும்
அறியாதலறிவேன்