தால் ஆட்டுதலன்றி
குருதி வாற
ஆருனை அடித்தாரோ
நீ உறங்க தாலே லோ

முகமும் வாட
ஆருனை ஏசினாரோ
நீ உறங்க தாலே லோ

மனமுங் கூச
ஆருனை பேசினாரோ
நீ உறங்க தாலே லோ

குரவளையில்
ஆருனை அறுத்தாரோ
நீ உறங்க தாலே லோ

இதெல்லாம் எப்படி செஞ்சாரோ
செஞ்சதும் எங்க போய் நின்னாரோ
ஏழ மனம் அவருந்தூங்க தாலே லோ

தாலே லோ



*****


இல்லும் இருப்பும் அல்ல
அம்மா
ஊண் ஊட்டுதலன்றி
வேறொன்றும் அறிந்திலேன்

அறமும் மறமும் அல்ல
அம்மா
ஊஞ்சல் ஆட்டுதலன்றி
வேறோன்றும் அறிந்திலேன்

சொல்லும் திறமும் அல்ல
அம்மா
தால் ஆட்டுதலன்றி
வேறொன்றும் அறிந்திலேன்

நோவும் சாவும் அல்ல
அம்மா
துயில் எழுப்புதலன்றி
வேறொன்றும் அறிந்திலேன்

உருவும் மருவும் அல்ல
அம்மா
கண் காணித்தலன்றி
வேறொன்றும் அறிந்திலேன்

வேறு ஒன்று இல்லை
அம்மா
வேறொன்றும் அறிந்திலேன்