மதாருக்கு நன்றி

சூது பவளம் கண்டேன் அல்லேன் நூலுக்கு அழகிய பின்னட்டை குறிப்பை வழங்கிய சமகால கவிஞரான மதார் அவர்களுக்கு என் நன்றி.

மதாரின் குறிப்பு

மரபார்ந்த சொல்லாட்சிகள் நவீனக் கவிதைக்குள் வரும்போது கவிதை முறுக்கேறி உரத்து ஒலிப்பதற்கான வாய்ப்புண்டு. மாறாக, வி.சங்கரின் கவிதைகள் அமைதியை அடைகின்றன. மரபின் உருவேற்றம் பெற்று உறைந்திருக்கும் சொற்கள் இவரது கவிதைகளில் உருகியோடும் நீரோட்டமாகின்றன. அதன் சிற்றலைகள் எழுப்பும் ஓசைகள் ஜலதரங்கமாய் மயக்குகின்றன.

மதார்