குருவி வருமென காத்திருக்கும் குருவி
19

குறுக்கிப் படுத்துப்
போர்த்திக் கொண்டால்
நானொரு குருவியின் முட்டை

குருவியோ ரொம்பப் பெரிய குருவி
ஆயினும்
நானொரு
குருவி வருமென
 தூங்காதிருக்கும் குருவி

20

உனக்கொரு கவளம்
எனக்கொரு தானியம்
அன்றன்றைக்குக் கொய்திட்டால்

மீந்த நேரம் முழுக்க 
வான் கிளை அமர்ந்து
எத்துணை கதை பேசலாம்