நீ கொள்க அன்னம்
28

வெகுநேர்த்தியாய்
அலகில் அன்னம்
அளிக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன்

இருந்தும்
உன் எச்சத்தைச் சுமந்து செல்ல
ஓர் அலகில்லை எனக்கு

29

வான் நோக்கி
உன்னையே திறந்த
நீ
கொள்க அன்னம்