32
கேட்பதற்கென அணி செய்யப்படும்
காதுகளுக்குப்
பாடுதற்குக் குரலேதுமில்லை
பல்லாயிரம் ஆண்டுகளாய்
தன் பறை அதிர்வைத்
தான் கேட்டு
அமர்ந்திருக்கிறது செவி.
33
நாமென்று எப்படிச் சொல்லுவேன்?
நாமெல்லாரும்
தனித்துத் திரியும்
நீள் அடருங்காட்டில்
நாமென்று எப்படிச் சொல்லுவேன்?
இத்துணை பேசியும்
மிஞ்சிய அவ்வொரு சொல்மேல்
பறந்து
தன் ஊழ் நடத்தும் புட்களிடம்






