உடல் அருளப்பட்டோனே
35

உடல் அருளப்பட்டோனே
நான் உன்னுடன் இருக்கிறேன்

அவ்வுடல் வற்றிச் சோறும் தொறும்
நான் உன்னருகில் வருகிறேன்

அருளியவன் அவ்வுடலினால் அமைக
நீ அவனுக்கருளியதால் அமைக

அருளப்பட்டோனே
நான் அவ்வுடல்
உன் இனிய கடைத்தேற்றம்

****

சொல் அளாவி நிறுக்கும்
எம் தந்தையே

நான் 
அவர்களின் சொல்லாவது
எங்ஙனம்? 

குழந்தாய்
நீ அனைவரின் சொல் அல்லவா? 
அனைவரில் அவர்களுமுண்டு

அச்சொல்
அவர்களின் விண்ணேற்றம்