அறிமுகம்

அப்பா பெயர் வேலுசாமி. அம்மா தனலட்சுமி. உடன் பிறந்தவர் இரண்டு சகோதரிகள்.

நான், வி.சங்கர், 1992 ல் பிறந்தேன். பொறியியல் கல்வி பயின்றேன். மனைவி பெயர் சந்திரிகா. என் மகள் பெயர் இசை வல்லபி. தற்போது நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூருக்கு அருகில் என் சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.

சிறு வயதிலிருந்தே வணிக எழுத்துகளை வாசித்திருந்தேன். 2013 வாக்கில் ஜெயமோகனின் யானை டாக்டர் கதை மூலம் தீவிர இலக்கியத்தை அறிமுகம் செய்து கொண்டேன். திரு. ஜெயமோகனை என் ஆதர்ச எழுத்தாளராகவும் இலக்கிய வழிகாட்டிகளில் ஒருவராகவும் கருதுகிறேன்.

சிலேட் பிரசுரம் வழியாக ‘ சூது பவளம் கண்டேன் அல்லேன்’ என்ற என் முதல் கவிதை நூல் வெளிவந்துள்ளது. குழந்தையாக நாம் பிறந்த பொழுது மற்றும் மாசில் மணிவண்ணம் ஆகிய இரு படைப்புகளும் வி சங்கர் எழுதி இன்னும் அச்சில் வெளிவராதவை. இவ்விரு படைப்புகளும் இத்தளத்தில் தொடர்கள் என்னும் பிரிவில் படிக்க கிடைக்கிறது.

நன்றியும் முத்தமும்.

வி சங்கர்

(

V sankar (வி சங்கர்) born in 1992 has been married to sandhrika and is having a daughter named isai vallabhi. He is residing at his own village unjapalayam with his family. He has been reading serious literature after his introduction with renowned writer jeyamohan’s works.

V sankar is predominantly working on tamil poetry and has authored a tamil poetic collection ‘ soodhu pavalam kanden allen’ published by slate publications. Apart from this published work, v sankar has also written two other poetic works namely ‘ kulanthaiyaaga naam pirantha pozhuthu ‘ and ‘maasil manivannam’

)