32
காலங் கடத்துவோனே!
நீ அவள் கையில் வந்ததெப்படி?
பல் துலக்கவும் குளிக்கவும் உண்ணவும் காலங் கடத்துபவள் ஆயிற்றே! அவள் கையில் நீ வந்ததெப்படி?
எல்லாவற்றையும் தன் கையாலயே காலங் கடத்துகிறாள் அவள்.
கனிகளை காலங் கடத்துவது யார்?
உயிர்களை காலங் கடத்துவது யார்?
அன்னை காலங் கடத்துவதால் குழவிகள் மண்ணில் வருகின்றன. குழவிகள் காலங் கடத்துவதால் வருகின்றனர் அன்னையர்.
விதைகள் காலங் கடத்தியதால் வந்தன கனிகள். கனிகள் காலங் கடத்தியதால் வந்தன விதைகள்.
காலங் கடத்துவது ஒரு விளையாட்டு. அதில் தோற்றவர்கள் அழுது காலங் கடத்துகிறார்கள்.
காலங் கடத்துபவர்களோ விளையாட்டிலேயே இருக்கிறாரகள். அவள் வெல்லவும இல்லை. தோற்கவுமில்லை. ஆகவே விளையாட்டினின்று வெளி வருவதுமில்லை.
அவனோ பூமிக்கு வந்ததிலிருந்து அறிவை காலங் கடத்துகிறேன் என்கிறான்.
அம்மாவோ இருவரையும் காலங் கடத்துபவர்கள் என வைதபடி காலங்கடத்துகிறாள்.
33
அப்பப்பா! எனக்கே ஒரு மாதிரி இருக்கிறது. கடைசி மூன்று அத்தியாயங்களில் கவித்துவம் கொஞ்சம் அதிகமாகி போய் விட்டது..
இத்தனை தூரம் அத்தியாத்தை தொடர்ந்து கவித்தனமாக ஓட்டியதில் ஒரு அயற்சி.
இடையில் இந்த கதை வேற போன் காலா போட்டு கொன்னுட்டான். எதையாவது எழுதுறவங்கள சுத்தீட்டு இருந்தவனுக்கு என்னோட போன் நம்பரை எவன் கொடுத்தானோ?
இந்த புத்தகத்தைக் கொண்டு போய் பத்தரமா சேத்தீட்டு சேந்தாப்புல ஒரு மாசம் லீவு எடுக்கனும் டா சாமி…
எல்லாருங் கேட்டுக்குங்க….
இந்த அத்தியாயம் ஒரு அத்தியாய நேரம் இங்கு நிக்கும்.
யூரின் போறவங்க போயிட்டு வந்திருங்க. சப்படறவங்க சாப்பிட்டு வந்திருங்க. இனி அத்தியாயம் எங்கையும் நிக்காதுங்க. நேரா நின்னோரா தான்.







