எம்மோடு நிற்கக் கண்டோம் இல்லை
முதலில் கை பொத்தி
புத்தகத்திலிருந்த கரடிக் குட்டிகளை
வளர்த்த 
நீ எடுத்துக்கொண்டாய்

பக்கத்தில் வளர்ந்திருந்த
ஜோடி நரிகளே
மிஞ்சியது எனக்கு

வரும் நாட்களில்
என் நரிகள்
குட்டி போடுமென்பதால்
உன் கரடிக் குட்டிகளையும்
சேர்ந்தே வளர்க்க முடிவு செய்தோம்
நாம்


****
விசும்பு வானம்
எம்மோடு 
நிற்கக் கண்டோம் இல்லை

 நீல நிறத்திடை
 நாம் இருந்தோம் இல்லை

அகலும் நிலத்திடை
சூழ சுடர்ந்தோம் இல்லை

எங்கெங்கு காணினும்
சூறை
அங்கெங்கும்
நம் பாதம்
நின்றோம் இல்லை

ஆற்றியிருந்து 
என் அடுத்த பாதம் 
எடுத்தபோது
நம்மில் 
நாம் இல்லை