-
Continue reading →: நொய்தின் நொய்ய சொல் – கம்பராமாயண வாசிப்புநண்பர்களே இன்றிலிருந்து தொடர்ந்து ஒரு வருடம் தினம் 30 பாடல்கள் என மொத்த கம்பராமாயணத்தையும் வாசிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். நொய்தின் நொய்ய சொல் எனத் தன் காவியத்தை பற்றி கூறுகிறான் கம்பன். மென்மையை காட்டிலும் மென்மை. அதே நொய்ய நிறத்த வண்ணத் தும்பியென நான் அச்சொற்களின் மேலெல்லாம் சென்றமர்ந்து சேகரிக்கும் பொன் சிந்தூரப் பொடி உங்களுக்கும் உரித்தானது. என் ரசனைக் குறிப்பை தொடராக வெளியிடவும் முடிவு செய்துளேன். வாரம் ஒரு…
-
Continue reading →: எங்கிருந்தோ வந்த குருதி39எங்கிருந்தோ வந்தகுருதியின் மேல்ஒரு குருதி முளைத்ததுகிளைத்து படர்ந்து நின்ற அதனடியில்குருதி முளைக்காமல் பார்த்துக்கொண்டதுஅக்குருதிமேல்எங்கியிருந்தோ வந்து விழுந்ததுமுளைக்குமொருதுளியினும் துளி பசுங்குருதி 40மரம் போலாவர்மரத்தின் அடிஅமர்ந்தவர்நின்றவர்போனவர்வந்தவர்புணர்ந்தவர்அருந்தவர்
-
Continue reading →: அவரவர் மரமாக நின்றோம்36புத்தம்புதிதில் உன்னைசேய்மையில் நின்று பார்த்தேன் நாட் செல்லஅண்மையில் நின்று பார்த்தேன்அன்றொருநாள்உன் அடியில்நாமிருவரும் நின்று பார்த்தோம்பிறிதொருநாள்அவரவர் இடத்தில்அவரவர் மரமாக நின்றோம். 37குடைக்குள்என் இடை வரை இருந்தஉனக்காகஉன் தலை வரை குனிந்துகுட்டியானேன் வெளியிருந்த அனைத்தும்கூடவே குனிந்து குட்டியானது
-
Continue reading →: உனக்காக கூந்தல் சூட்டினேன்34 எனக்கேதும் பொருட்டில்லை உனக்காக கூந்தல் சூட்டினேன்எனக்கேதும் பொருட்டில்லைஉனக்காக அணி பூட்டினேன் எனக்கேதும் பொருட்டில்லை உனக்காக உனை கூடினேன் எனக்கேதும் பொருட்டில்லை உனக்காக உனை ஊடினேன் எனக்கேதும் பொருட்டில்லை உனக்காக எனக்கேதும் பொருட்டில்லை35தப்பி விட பார்க்கிறாய்என்னிடமிருந்து நீஎப்பக்கம் திரும்பினாலும் நீஎனக்குஎங்கிருந்து எங்கு தப்பிக்க முடியும் நீஎன்னிடம்
-
Continue reading →: மரத்திற்கு மரம்31நேற்றிலிருந்துஎந்தப் பாட்டுக்கும் கீழே விழாமல் ஆடுகிறதுஆறு வயதேயான பல் 32கண்ட இடத்தில்கழட்டி போடுவதற்கென்றேபாம்பு போட்ட சட்டை ஒன்றைவீட்டில் வைத்திருக்கிறேன்33மரத்திற்கு இலைஇலைமரத்திற்கு வேர்வேர்மரத்திற்கு மரம்மரம்
-
Continue reading →: நேற்று மண்டிய கசடுகள்28நம் இரவு தங்கலிலிருந்துஎழுந்து தினமும்நாம் சுற்றிவரும் நிலத்தில்ஒன்றுக்குமேலான இடங்களில்பீய்ச்சியடிப்பதுநேற்று மண்டியகசடுகளை29குளிக்க வந்த இடத்தில்ஒரு மீனைதூக்கிக் கொண்டோடுகிறதுபறவை 30உள்ளே செல்லபூட்டியிராத கதவைதிருகி திருகிப் பார்த்ததுசாவி வெளியே வரஅடம்பிடித்து நின்றதுதாழ்
-
Continue reading →: காத்திருந்த நேர்கோடு25தன்னைபாதங்களில் மறைத்து வைத்துநடமாடுகிறது இவ்வுலகம் 26ஏய்கீச்சுக்குருவியே! நேற்றிரவுஉனக்கும் மழைஎனக்கும் மழை273 x 3 புள்ளிகளின் மேல் நகர்த்தி விளையாடஆளுக்கு 3 கற்கள் உன் கற்களைஉன்னிடத்தில் வைத்தாய்என் கற்களை நான்என்னிடத்தில். நம்மிருவர் கற்களும்நம்மிருவர் நேர்கோட்டில் இருந்தது நம்மருகேஒரு நேர்கோடுநேர்கோடில்லாமல் காத்திருந்தது
-
Continue reading →: வான் பொருட்களின் அருங்காட்சியகம்நட்சத்திரங்களும் சூரியனும் என் செய் பொருட்கள் – நான்ஸி ஹால்ட் (Nancy Holt) நமக்கு நட்சத்திரம் என்றானதுஎவ்வுலகின் சூரியன்? – இது நான் 6 வயதான என் மகள் ஒருமுறை பறக்கும் மீன்கள் பற்றி கேட்டு துளைக்க, இதற்கு மேல் தெரிந்து கொள்ள நீ புத்தகங்களை படிக்க வேண்டும் என்றேன். அவள் மீன்களை நேரில் பார்க்க முடியும் போது அவற்றை தெரிந்து கொள்ள ஏன் படிக்க வேண்டுமென கேட்ட கணம்…
-
Continue reading →: கண்டதும் கழிதும் பூத்து மிதந்தது22மரத்தில்சல சலத்து மிதந்தனஇலைகள் சத்தங் காட்டாமல்ஆகாயத்தில்ஓடிற்று ஒரு நதி 23எங்கு செல்வதென அறியாமல்தன் கை பிடிக்க ஆளிலாமல்சாலை கடக்க முடியாமல்முன்னுக்கு ஒரு தூரம்பின்னுக்கு ஒரு தூரம்தத்தளித்ததுயாரோ விட்டு சென்றப்ளாஸ்டிக் பை 24வறியார் நிலத்தில்கண்டதும்கழிதும்பூத்துமிதந்ததுமடவார் குளம்






