• மாசில் மணிவண்ணம் – 4 – எரிபரந்தெடுத்த பத்து

    27நம்மிரு காம்பும் நம்மிரு காம்பிற் முட்டி நம்மிருவர் உடைத்து நம்மிருவர் அழித்ததே. கலங்குவதோ கண்ணீர் மலங்குவதோ? தரையில் படுத்து இலங்குவதோ?கருந்தந்தம் தூக்கி வருங்களிறு என் கலம் தன் கை எடுத்தாடுதே.கண்ணயராது காப்பருளிய காம்பின்று என்மேல் கன்னக்கோல் வைத்தாடுதே. 28ஆடுதே என் நாவிற் உன் நா. கண் தேடுதே என்மேலெங்கும் நின்முலை. ஓடுதே என்மேலெங்கும் உன் பிடிக் கைதந்தம். நெஞ்சினை நெரித்ததே நின்னெஞ்சு. இவ்வந்தர ராவில் இவ்விரு நெஞ்சில் நான் என்ன…

    Continue reading →: மாசில் மணிவண்ணம் – 4 – எரிபரந்தெடுத்த பத்து
  • மாசில் மணிவண்ணம் – 3 – அழைப்பு விடுத்த ஆறு

    21மழையரசே குக்கில் உனை கூத் கூத் கூத்தென அழைத்தினை மையரசே செம்பூத்து உனை ஊத் ஊத் ஊத்தென அழைத்தினைவானரசே உன்னிடம் வாங்கி நிறைக்க வையமே தன் கலம் வைத்தினைநிறைகலம் எம் ஊன் எரித்து ஒருவிளக்கு அவள் ஆக்கினை சுடர்மாரிக்கடியில் நான் என்னையே வைத்தினைகொண்டு வருக அவள் காம்பு கொட்டு கொட்டென கொட்டு வருக அவள் சீற்றம்  ஆடி வருக அவள் பாதம் தீண வருக அக் கைகாம்பு சூழ்ந்து வருக…

    Continue reading →: மாசில் மணிவண்ணம் – 3 – அழைப்பு விடுத்த ஆறு
  • மாசில் மணிவண்ணம் – 2 – வண்ணம் பார்த்த பத்து

    11கண்ட வண்ணமே கண் வண்ணமே திறந்த வண்ணமே காம்பின் திறல்வண்ணமே திண்வண்ணமேவந்த வண்ணமே ஊறித் திரண்ட வண்ணமேஊன் வண்ணமே உண்ட வண்ணமே கிடந்தது என் வண்ணமே வாயிற் சிவந்த வண்ணமே கொட்டித் தீராப் பைம்பொன் வண்ணமேகொண்டு வருதலெல்லாம் உன் கோன்வண்ணமே12வண்ணமுறு திங்கள் வரும் வண்ணம் ஒரு திசை வண்ணம் தேடித் தவித்திருந்தேன்திங்களொரு வண்ணம் வரும் வண்ணம் என் கண்வண்ணம் கனிந்திருந்தேன் பட்டபகற் வண்ணமதில்எந்த வண்ணம் எந்த வண்ணம் என்றறியாதிருந்தேன். 13தேன்…

    Continue reading →: மாசில் மணிவண்ணம் – 2 – வண்ணம் பார்த்த பத்து
  • மாசில் மணிவண்ணம் – 1 – வழி கேட்ட பத்து

    1மாசில் மணிவண்ணம் எழும் முன்னை எழுந்தேன் என் துகள்வண்ணம்ஆங்கே வாரும் வழியுண்டோகதிரில் உன் கனிவண்ணம் எழும் முன்னை எழுந்தேன்என் நிழல்வண்ணம்ஆங்கே வாரும் வழியுண்டோவழியில் செல்வண்ணம்எழும் முன்னை எழுந்தேன்என் நிறைவண்ணம்ஆங்கே வாரும் வழியுண்டோ2உண்டோ இல்லையோ ஒருங்குதையல்கூறும் முன்னை எழுந்தேன்கண்டோ இல்லையோ கரையும் புள்காணும் முன்னை எழுந்தேன்தீண்டோ இல்லையோ வைகறை திகையும் முன்னை எழுந்தேன்இன்றோ இல்லையோ கண்ணில்கண்டது முன்னை எழுந்தேன் இனிஇலன்3இலன் என்றென்னி இங்கு எம்மை கைவிட்டீரோஉளன் உருகிஉம்மை உரசித் தேய்த்துமருந்துண்டேன் மறந்திட்டீரோகலம்…

    Continue reading →: மாசில் மணிவண்ணம் – 1 – வழி கேட்ட பத்து
  • முத்தி முத்தி

    விண் தடம்மேல் முதலமர்ந்த புள்உனக்கு முத்திவன்முலை மேல்முதலெழுந்த கண்உனக்கு முத்திதண்அலை மேல்முதலிருந்த  நஞ்சேஉனக்கு முத்திகடை கடைந்துகண்டெடுத்த அமுதேஉனக்கு முத்திஊழ் கடந்தெனைஇங்குவைத்த எதுவோஉனக்கு முத்திஒன்றியிருந்துஒன்றை முதலெடுத்தஎனக்கு முத்திஎனைச் சேர்த்தநாமல்லார்க்கும் முத்தி முத்தி

    Continue reading →: முத்தி முத்தி
  • அமுதங் காணீரோ

    தீம்புனல் தேக்கி நிறுத்திதிவ்யம் பல செய்யாழிஅலை கொண்டுவாரும்அமுதங் காணீரோஅலகில் அலகு கோர்த்துஅஞ்சதற்கேதுமின்றிஅருந்தும் புள்குருவிஅமுதங் காணீரோபுவியில் புவி சேர்த்துபுடவி நெய்தெடுக்கும்கண்காணா கடைசல்அமுதங் காணீரோதாலில் தால் வைத்துஉயிர் ஒன்றித்திருக்கும்உண்ணும் ஊண்ஈரஅமுதங் காணீரோகாற்றோடு செவி சேர்த்துதினைவன புள்ளினம்போல்நுழையும் நுண்ரீங்காரங்கோடிஅமுதங் காணீரோஎம் தடந்தேரும் எம்மோரேஅடி அடிக்குஅமுதங் கண்டு குடித்துநிறைநெஞ்சம் நடந்தாளீரோஎடுத்தது எடுத்தாளீரோமடுத்தது மடுத்தாளீரோபுள்ளினங்காள் புவியினங்காள்கல்லினங்காள் களியுயிரினங்காள்கண்விசும்பும் விண்விசும்பின் வெளியினங்காள்பல்லாண்டு பல பல்லாண்டுபாதஞ் சீர் வைத்துமண்ணில் இருந்தருளீரோஓதம் ஓடும் உடற்பாதம் நின்றுபார் நடத்தும் பாழ் அமுதம் பார்த்தருளீரோ

    Continue reading →: அமுதங் காணீரோ
  • தலச்சன்

    தலச்சன் எனக்குகுட்டியெல்லாம்வந்து முடிந்ததும்என் குழியிலிருந்துகடையாகபிறந்ததுசெத்தை நஞ்சு

    Continue reading →: தலச்சன்
  • உன் நெஞ்சாங் குருதி

    தனித்திருக்கத் தெரியுமோஉனக்குகேடு கெட்டதேவெறுங் கெட்ட வார்த்தையோடுதனித்திருப்ப தெப்படியெனத் தெரியுமோஉனக்கு*****என் கொம்பிலும்குளம்பிலும்குத்திக் கிளறிப் பார்த்தேன்உன் நெஞ்சாங் குருதியில்நான் இல்லை

    Continue reading →: உன் நெஞ்சாங் குருதி
  • திக்கு அற்ற காட்டில்

    திக்கு அற்ற காட்டில்நான்என்னைத் துழாவினேன்கைக்குச் சிக்கியதோகழண்டு கிடந்தஒரு கால் குறடு***”ஏய்த்து எனை விட்ட வெளி மேல் போய்த்துப்பினேன்எச்சிக்குஎங்கு போகும்என் சுள்ளி

    Continue reading →: திக்கு அற்ற காட்டில்