• குருவி இட்டது ஒரு கூழாங்கல்

    35விளையாட எனை அழைத்தாய்குளிக்க வேண்டுமென்றேன் குளித்து  விளையாடுவோம் என்றாய்அழுக்கான பிறகே குளிக்க வேண்டுமென்றேன் அப்படியானால்அழுக்காகி விளையாடுவோம் என்றாய் வேண்டுமென்றேஉன்னோடு விளையாடி கொண்டிருந்தேன் 36காற்று பட்டு பட்டுமுனை மழுங்கியதுஎன் காகித ராக்கெட் அதன் பிறகுஅது யாரையுமே இடிக்கவில்லை எங்கேயும் முட்டி நிற்கவுமில்லை 37எந்த பல் விழும் முதலில்ஆட்டின் குளம்படியில் போட்டால்ஆட்டின் பற்கள் வளருமெனக்குமாட்டின் காலடியிலும் இரண்டு போடுவேன் பற்கள் அனைத்தும்உதிர்ந்த பிறகுமுன்னிரண்டு பற்கள் மட்டும்எங்கும் விழாமல்பார்த்து கொள்வேன் நான் யாருமறியாமல்முயலோ அணிலோ…

    Continue reading →: குருவி இட்டது ஒரு கூழாங்கல்
  • Song of a solidary Kingfisher

    1No man of VirtuesInto the WildSong of a Solitary KingfisherEchoes still2They who carry severed heads Will never knowYour feet, laid low, Is my face.3Brimming, it yearns to soar a SkyOr spill a Stream, The lamp of fullness Is there a CompassFor the Glow that radiants4Like a Breeze,I will kiss You…

    Continue reading →: Song of a solidary Kingfisher
  • குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 8

    23 வவ் வவ் வவ் வு  ஊ ஊ  ஊ வவ் வவ் வவ் வு ஊ ஊ  ஊ என்னதிது என்னதிது என்னதிது ஹ்ப் ஹ்ப் ஹ்ப் ஹ்ப் புது வாசம் பூமியின் முதல் வாசமா? அதுவே தானா? ஆகா இதுவொரு குட்டி. ஆமாம் ரொம்ப குட்டிக் குட்டி. இல்லை நல்லா மோந்து பார்ப்போம். ஓகோ எனக்கு தாங்கவில்லை. உண்மையிலேயே இதுவொரு குட்டி. என்னுடைய புது குட்டி. அப்பா…

    Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 8
  • இனித்து கிடந்தது ஒரு பாம்பு

    31இன்றுஎதையுமே எழுதவில்லைஎழுதாமல் காட்டுகிறேன்.பார்க்கவில்லையா நீ?32வாக்கிங்என்ற வார்த்தை உன் வாலைஇப்படி ஆட்டுமென காற்றில் உன்னை இப்படித் தூக்கிச் சுழற்றுமென சொல்லும் முன்பே நான் அறிவேன்33ஒன்றன்பின் ஒன்றாக வண்டிகள் விரைந்தனசாலையில்சக்கையாகஇனித்து கிடந்ததுஒரு பாம்பு 34அடுத்த முறை அந்த குருவியை பார்க்கும் போதும் சொல்வேன் நாளும் நான்வீட்டுத் தரையில்தலை சிலிப்பிஉன்னைக் காட்டிலும்இறகுகள் உதிர்ப்பேன் தெரியுமா?

    Continue reading →: இனித்து கிடந்தது ஒரு பாம்பு
  • குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 7

    21 டேய்.. இனி இப்படியே தவழ்ந்து கொண்டிருக்க முடியாது. அதுவும் நான் கிடப்பது முழுக்க எச்சிலும் வீச்சமடிக்கும் சிறுநீரும். கேட்டால் அமிழ்தம் உப்பு என்று கதை வேறு. இன்னும் ரெண்டு மூன்று அத்தியாயம் வரை பார்ப்பேன். அதற்குள் நான் பேசியாக வேண்டும். நடப்பதை பிறகு பார்ப்போம். ஒருவேளை தவறு நடந்து விட்டால்? அய்யோ…. நான் என் கால் வைத்து நடப்பதைப் பற்றி சொன்னேனடா. நடப்பதற்கு முன் பேசுவதென்பது இங்கே வழக்கத்தில்…

    Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 7
  • நான் நிறுத்துவேனிலை

    27 சப்பியஉன் முலைகளை நான் விட்டுத் தருவேனிலை உன் காதற் காமம் பட்டுஆடிய என் குழைகளைநான் நிறுத்துவேனிலை மயிரடர்ந்தநின் திருமேனிகண்கண் எடுத்தேனிலை முயங்கும் நம்மேனிகண்பார்க்கும் ஆளையும்நான் தடுத்தேனிலை 28 அற்புதமான கற்கள்பார்க்க அரியதுயாரோ பேசிக்கொண்டிருந்தனர் அற்புதம் இல்லாதகற்களையேநான்இன்னும் பார்க்கவில்லை 29 காட்டு மலர்க் களைகளைநோக்குங்கள்அவற்றிற்கும்உங்கள் இறைவன்அணி செய்கிறார்30காலதூரம் தள்ளிகாத்திருக்கும்முடிவிலிக்குத்தின்னக் கொடுக்கஇந்த மரத்தின் கனிமரமும் கனியுமாகிசெல்கிறது

    Continue reading →: நான் நிறுத்துவேனிலை
  • குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 6

    19 அம்மாவுக்கும் அவள் அம்மாவுக்கும் அம்மாவானவர்கள் எல்லோருக்கும் வந்தது அவர்களை ஆள் செய்விக்கும் ஓராள். டேய். அதை அம்மா சொல்ல வேண்டும். அன்றெல்லாம் என்னோடு விளையாடியவன் நீ. நமக்கு ஆள் என நாம் இங்கு வந்தோம். அதையொன்றும் நாம் மறைக்க வேண்டியதில்லை. மற்றும் இந்த கதையோடு நீ சேர்வது எனக்கு பிடிப்பதில்லை. அவனுக்கு நிறைய புழுகினிகளே நண்பர்கள். நாம் அப்படியா? நின்னோராவில் நமக்கு உண்மையும் பொய்யும் சொல்லத் தெரியாது. பூமியில்…

    Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 6
  • விசும்பின விசும்புகள்

    24காலை போதில்தினம் உன் பிரகாரம்வந்து நிற்கிறேன் தகிக்கும் வேளைநோக்கித் தீரவில்லைஉன் நிர்வாணம் அந்தியில்ஏக்கமும் துயரமுமாய்வீடு திரும்புகிறேன் திரை மூடியயாமமறியாமல்நாம் கூடினது வெளி வைகறைநாம் எழுந்தருள்வது உன் கருவறை 25 இருளில்தன்னைஇலையிலையாய்சொட்டித் தீர்க்கிறதுமரம்

    Continue reading →: விசும்பின விசும்புகள்
  • குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 5

    17 பூமியில் உயிர்கள் பெறவதனைத்தும் வேறொன்றின் எச்சில். மண் புழுதன் எச்சிலையே இப்பூமி உண்கிறது. சூரியனின் எச்சிலே இலைகள் உண்ணுவது. இலைகளின் எச்சிலே பூவாகி பூமியில் கொட்டுகிறது. புள் பூண்டு எச்சிலே கனிகளில் வன்னமிக்கிறது. கனிகளின் எச்சிலோ ஊன் ஆகிறது. விலங்குகளின் எச்சிலே ஊண் என நாக்கில் சுவைகிறது. மானிடரின் எச்சிலே மண் வாயில் இனிக்கிறது. எச்சிலே முத்தம். எச்சிலே அமுதம். எச்சிலிலிருக்கிறது உயிர்தொகை. எச்சிலிலிருக்கிறது புவி வாழ்வு. அவள்…

    Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 5