-
Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – பற்றிகுக்கூ சிவராஜ் என்னிடம் இன்றுள்ள பெற்றோர் குழந்தைகளை முறையாக அறிவதில்லை, இது பற்றி பேசும் ஒரு நூலை மொழிபெயர்க்க முடியுமா என கேட்க, நான் சொந்தமாகவே சில கட்டுரைகளை எழுதி விடலாம் என ஆரம்பிக்க, கண்மண் தெரியாமல் வெளிவந்து நம் முன் அமர்ந்திருக்கிறது இச்சிறு நூல். இதை பேச்சிற்கு வேண்டுமானால் குறுங்காவியம் என கௌரவமாக சொல்லிக் கொள்ளலாம். நான் இதை நிறைய தப்பு பண்ணி வைத்திருக்கும் குட்டிக் காவியம் என்றே…
-
Continue reading →: கூழாங்கல் ஆக விரும்பினேன் நான்6காட்டுக் கொடிகளாலானஇந்த கூடையைகொடுக்க வேண்டியேநான் வந்தேன். திறந்து பார்க்கும் போது நீ எடுக்கஇரண்டு இனிப்பு துண்டுகள் கூட வைத்தேன். திறந்து பார்க்கும் போதும்நீஅந்த கூடையைபார்க்கவில்லை 7ஒரு கூழாங்கல் ஆக விரும்பினேன் நான் மழுங்கியது. ஆயினும்கூர் முனை ஏதுமில்லாதது நாள்தொறும்ஆற்றில் கிடந்து பார்த்தேன்என் கூழாங்கல் அங்கு கிடக்கவில்லை ஏனில்மண்ணில்நான்உப்பாயிருக்கிறேன்
-
Continue reading →: எங்கு வைப்பது நம் கண்ணீரை?1. காட்டில்அறத்தோன் இல்லைதனித்த ஒரு மீன் கொத்தியின்பாடல் மட்டுமே உள்ளது2.வானேறவோ வழிந்தோடவோநிரம்பித் தவிக்கிறதுநிறைவிளக்குசுடர் எரியும் திசைஎன ஏதுமுண்டா3.காற்றெனஇவ்வுலகனைத்தையும்முத்தமிடுவேன் நான்.இவ்வுலகு என்னையும்.4.என்னிடமுள்ளதுநம் கண்ணீர்எந்த விளக்கு மாடத்தில்ஏற்றி வைத்தால்நமக்கு அது எட்டும்?
-
Continue reading →: கவிதைகளுக்கு செல்லுமுன் சில சொற்கள்இங்கு நான் வெளியிடும் கவிதைகள் அனைத்தும் தலைப்புகள் அற்றவை. பெரும்பாலும் தலைப்பிடுவது கவிமனம் அல்ல. கவிதையை எழுதியவனின் போதமனம் வாசித்து அளிப்பதே தலைப்பு என்பது என் அனுபவம். தலைப்பென்பது கவிதையின் வாசிப்பை அதை எழுதியவனே ஒரு இடத்தில் ஆனி அடித்து வைப்பதுதான். வாசகனின் விருந்தெலையில் அளையும் வேறொருவனின் விரல். கவிமனம் விளம்புவதன்றி வேறறியாது. அந்த கவிமனம் எழுதிய வரிசையிலேயே இவை பிரசுரிக்கப்படுகின்றன. அம்மனதின் தனித்த பயணத்தை கண்டடைதல்களை வாசகன் தானும்…
-
Continue reading →: சிறிதும் பெரிதுமான ஒரு தொடக்கம்நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் திடீரென 50 நாட்களுக்குள் ஒரு 190 கவிதைகளை எழுதி முடித்தேன். உடனே மீண்டும் 10 நாட்களுக்குள் ஒரு சிறு காவியம் போன்ற ஒரு நூல். அது முடிந்ததும் 20 நாட்களுக்குள் ஒரு அந்தாதி நூல். இது மற்றவர்களுக்கு வாசிக்க கிடைக்க வேண்டும் என்பதாலும் எனக்கு தொடர்ச்சியாக எழுத உந்துதல் அமைய வேண்டும் என்பதாலும் நான் இந்த தளத்தை ஒரு மின்னிதழாக ஆரம்பிக்கிறேன். தொடந்து என் எழுத்துகளை…
-
Continue reading →: குரு வணக்கம்
நாம் இங்கு அழியாது நிற்கும் எந்தவொரு செயலையும் தொடங்கும் முன்பு நம் ஆசிரியர்களை வணங்குகிறோம். அவர்களிடம் நாம் கற்றவையே அந்தச் செயலாய் நம்முன் விரிந்து ஒளிர்வதைக் காண்கிறோம். இந்த வலைப்பதிவை ஆரம்பிக்கும் இத்தருணத்தில் என் ஆசிரியரை நினைத்துக் கொள்கிறேன். எங்கும் இறங்காமல் வானில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்பவன் கீழே தூய்மையான கண்டடைதல்களை கோர்த்தபடி உள்ளது ஒரு பெரும்வெளி. அங்கு நான் கண்டடைய நேர்ந்த முதல் வழிகாட்டி கல் ஜெயமோகன். பயணம்…






