நான் புகைவதன் நறுமணம்
உன்னை
அமைதியில் ஆழ்த்துக

நான் எரிவதன் நறுமணம்
உன்னை
உறங்க வைப்பதாகுக

கானகத்தின் கற்துண்டு 
நான் 
காணாமலாவதன் கற்பூரம்
உன்னை
கண்டு கொள்வதாக.