• ஒரு தொடுகை பேசி கொண்டோம்

    20இத்தனை ஆயிரம்நாவுகளால்நக்கி விடுகிறது மரம். துவட்டிக் கொள்ளமற்றுமொரு மரத்திடம்ஓடிச் செல்கிறதுகாற்று 21என் முதுகில்முடியடர்ந்த உன் வால் வேண்டும் ஒருமுறையேனும்நானதை ஆட்டிப் பார்க்க வேண்டும் 22 ஆம் இங்கு எதுவுமிலைஎது வரினும் அதுவுமிலை தேம்பியழுது காற்றிலென் கூந்தலாடவே வந்தேன். எனக்கிங்கு ஏதுமிலை  23    நெடுநேரம்நம் சொற்கள்அங்குமிங்கும்இங்குமங்கும்ஓடியதில்நாம் பேசி கொள்ளவில்லை தனித்து வரும் வழியிலொரு தொடுகை பேசி கொண்டோம்

    Continue reading →: ஒரு தொடுகை பேசி கொண்டோம்
  • குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 4

    14 ஆழியிருள் ஒளியலை. இருளில் துவங்குகிறதனைத்தும். அலையில் வந்து சேர்கிறதனைத்தும். இருள் ஒரு கரு என அறிக. அதிலிருந்து கொணர்வதே ஒளி என கொள்க. நான் இருள் காணாது இங்கு வந்தேன். வந்தவிடத்தில் இருள் காணவும் ஒளி பேணவும் நின்றேன். ஆம் இருளிலாது இவ்வுலகிலை. என் இருள். அவன் இருள். முடிவிலி இருள். கனவில் தோன்றும் இருள் நோக்கி நான் என் கையசைப்பேன். விழிப்பில் தெரியும் ஒளியை கையணைப்பேன். இருளும்…

    Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 4
  • தன்னைத்தான் சிமிட்டுகிறது மின்மினிகாடு

    16திடுமெனஎதிர் வருவோரை காட்டி யாரிவர் எனக் கேட்டாய்தடுமாற்றத்தில் நான்தெரியாதென பொய் சொன்னேன் 17 இரவின்முடிவிலா ஆடியில் தன்னைத்தான் சிமிட்டுகிறதுமின்மினி காடு18 ஆளற்ற தென்னந்தோப்பிற்குள்தனித்து விடப்பட்டிருந்ததுஒரு வாட்டர் ஆப்பிள். எடுத்து கடிக்கவும் மனமில்லை.சிரித்து சிவந்த முகமோமிகச் சிறியது. அதன் அம்மாஅருகில் இருப்பது போலவும்தெரியவில்லை காக்கையோ குருவியோதவற விட்டதென்றால்கொடுத்தனுப்ப வேண்டியதுமில்லை   கூட கூட்டி போகவும் வழியில்லை.வீடென்றால் அதற்கு புழுக்கம் உண்டாகலாம்.  யாரிடம் கொண்டு சேர்ப்பதுநம்செல்ல குட்டியை

    Continue reading →: தன்னைத்தான் சிமிட்டுகிறது மின்மினிகாடு
  • குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 3

    11 நான் தான் இந்தக் கதை பேசுகிறேன். விட்டால் என்னை கண்டு கொள்ளாமல் இப்படியே மாறி மாறி புகழ்ந்து தள்ளுவார்கள் இப்பூமியை. இனி கதையை கதை தான் தள்ள வேண்டும் போலிருக்கிறது. அவரவரை பற்றி பேசும் ஆவலில் கதை சொல்பவர்கள் எப்போதும் என்னை மறக்கிறார்கள். இம்முறை என்னை சொல்ல நானே வந்திருக்கிறேன். இவர்களை இங்கேயே சுற்ற விடுவது நல்லதல்ல. பொறுப்பற்ற இந்த புது பூமிவாசிகளை எதையாவது காட்டி என்னை நோக்கி…

    Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 3
  • முத்தமிடும் நேர்கோடு

    13சொற்கள்மன்றாட்டுக்கெனவிளையாட்டுக்கெனநீ அளித்த பாவைகள்இறைவனுக்கரசேநம் பாவைகள் மேல்பொருட்களை ஏற்ற வேண்டாமெனஎம் பெரியோரிடம் சொல்வீரா?14வளைந்து வளைந்துசெல்லும் நேர்கோடுவழியில்நிறுத்தி நிறுத்திமுத்தமிடுகிறதுபார்க்குமனைவரையும்.15தூரத்தில்கருப்பும் சிவப்புமான ஒரு பொட்டுமும்பரமாய் வேலை பார்த்துக் கொண்டிருந்தபூச்சி மருந்து மெசினைசுற்றி சுற்றி பறக்கிறதுகுளவியாய் இருந்தால்கூடு கட்டஓர் இடுக்கு தேடலாம்தேனீயாய் இருக்காதெனசொல்வதற்குஇன்னும் அவ்வளவு நெருக்கமாக செல்லவில்லைநான்

    Continue reading →: முத்தமிடும் நேர்கோடு
  • குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 2

    6 இது நான். அதாவது அவன். நின்னோராவில் அப்படியொன்றும் அழகிய பெயரில்லை எனக்கு. அவள் இந்த பூமிக்கு வந்த கணமே எனக்கு அப்பெயரை அளித்தாள். அதன் பொருட்டே அவள் மண்ணிலிறங்கும் வரை நான் என் முன்னிருந்த எச்சாளரமும் திறக்காதிருந்தேன். அதன் வழி எனக்கு வேறு பெயர் வந்து விட்டால்? யாத்திரையில் இருப்பவனுக்கோ பெயரில்லை. பாலையின் நடுவிருக்கும் குளிர்ந்த கல்மண்டபம் எனக்கு அப்பெயர். அதிலேயே தங்கி அதையே நாவில் தொட்டு முகர்ந்து…

    Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 2
  • கிடத்தப்பட்ட உன் பாதங்களே எனக்கு முகம்

    9ஒவ்வொரு முறையும்நான் வருவதற்கு முன்பே யாரோஉன் பாதங்களைகாயப்படுத்தி விடுகிறார்கள் நீயோவிளையாட்டெனஅவர்களிடை வைத்துக் கொள்கிறாய்உன்னை உன்கால் தடங்கள் கண்டுவழி தேர்வது எத்தனை கடினம் என்பதைநீ புரிந்து கொள்வதேயில்லை 10மலம் என்ற சொல்லிலிருந்துஒரு கை அள்ளுமோசொல்11தலை வெட்டிஎடுத்து செல்லும்அவர்கள்அறியமாட்டார்கள் கிடத்தப்பட்ட உன் பாதங்களேஎனக்கு முகம்

    Continue reading →: கிடத்தப்பட்ட உன் பாதங்களே எனக்கு முகம்
  • குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 1

    1 இது தனக்கு தோன்றியதை தான்தோன்றி தனமாக சொல்லிச் செல்லும் சொற்கள் எனில் ஆம் அது அவ்வாறே. இது ஒரு டைரி குறிப்பாக இருக்குமெனில் ஆம் அது அவ்வாறே. புதிதாக வந்த  பூமி வாசிகள் தங்களைக் கண்டு கொண்ட கதை எனில் ஆம் அது அவ்வாறே. இல்லை வெறும் ஏமாத்தலாட்டமும் முன்னும் பின்னும் முரணாக கிறுக்கிய பிதற்றலும் எனில் ஆம் அது அவ்வாறே. வெறும் நாடகமெனில் ஆம் அது அவ்வாறே.…

    Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 1
  • குழந்தையாக நாம் பிறந்த பொழுது – பற்றி

    குக்கூ சிவராஜ் என்னிடம் இன்றுள்ள  பெற்றோர் குழந்தைகளை முறையாக அறிவதில்லை, இது பற்றி பேசும் ஒரு நூலை மொழிபெயர்க்க முடியுமா என கேட்க, நான் சொந்தமாகவே சில கட்டுரைகளை எழுதி விடலாம் என ஆரம்பிக்க, கண்மண் தெரியாமல் வெளிவந்து நம் முன் அமர்ந்திருக்கிறது இச்சிறு நூல். இதை பேச்சிற்கு வேண்டுமானால் குறுங்காவியம் என கௌரவமாக சொல்லிக் கொள்ளலாம். நான் இதை நிறைய தப்பு பண்ணி வைத்திருக்கும் குட்டிக் காவியம் என்றே…

    Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – பற்றி