• அல்லேம் அதுவும் அல்லேம்

    44எப்பொருட்டினும்நானிங்கு வந்திலேன் இங்கிருந்தேன்நானிங்கு வந்திலேன்45 இவ்வுலகை காத்தேன்இவ்வுலகம் கொன்று புசித்துஇவ்வுலகை காத்தேன்இன்றில்லேல் அன்றில்லேல்இவ்வுலகம் கொன்று புசிக்கவெனஇவ்வுலகை காத்தேன் 46 விரிதிருமண்ணும் அல்லேம்சூழ்திருவானும் அல்லேம்காற்றும் அல்லேம்கனியும் அல்லேம்சொல்லும் அல்லேம்சுடரும் அல்லேம்என்னும் அல்லேம்உன்னும் அல்லேம்ஏனிந்த பாடோ அம்மாஅல்லல் அல்லேம் அல்லேம் அன்றிவேறேதும் அல்லேம்அல்லேம் அதுவும் அல்லேம்

    Continue reading →: அல்லேம் அதுவும் அல்லேம்
  • சந்திரிகா லயம் சேர்த்த சங்கீதம்

    வானப்ரஸ்தம் எனும் மலையாள திரைப்படத்தின் காமினி என்னும் பாடலை நேற்றிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்பாடலின் சமஸ்கிருத சொல்லாட்சிகள் பாடலாக கேட்கும்போது ஒருவித மயக்கத்தை அளிப்பவை. சந்திரிகா லயம் சேர்த்த சங்கீதம் ஆலிங்கனம். சுபத்தரையை சந்திக்கும் அர்ஜுனன் பாடுவது. இப்படத்தில் அர்ஜுன வேடமிடும் கதகளி கலைஞனாக நாயகன். கதகளியில் தோன்றும் அவ்வர்ஜுனனை மட்டுமே காதலிக்கும் உயர் குடி பெண்ணான நாயகி (சுபத்தரை என பெயர் கொண்டவள்) அவன் அவ்வேடத்திலிருக்கும் போதே உறவு…

    Continue reading →: சந்திரிகா லயம் சேர்த்த சங்கீதம்
  • ஓர் ஜுகல் பந்தி

    41அண்டையர்களிடம்நீயும்உன் கூட்டமும்நெஞ்சு நிமிர்த்திஇரு றெக்கை விரித்துதத்தி தாவிகீச்சலிடுவதுநீயல்லாதவர்க்குஓர் ஜுகல் பந்தி 42 என்னோடுவிரிந்து நின்ற உனக்குதர முடிந்ததெல்லாமொருமுத்தந்தான்43 தூங்கிவிட்டதெனநடிக்கும் இலையில் தொட்டால் சிணுங்கி எழுகிறது

    Continue reading →: ஓர் ஜுகல் பந்தி
  • காத்து நின்றதன் எச்சம்

    41ஓசையில்லாமல்கைகள் குவித்துஉடல் குறுக்கிஓர் ஓர் அடியாககால் வைத்துவிருட்டென பறந்ததுநாம் 42நம் சந்திப்பு புள்ளியில் நீகாத்து நின்றதன்எச்சம்பறந்து சென்றிருந்தது நீபறந்து சென்றதன் எச்சம்காத்து நின்றிருந்தது

    Continue reading →: காத்து நின்றதன் எச்சம்
  • நொய்தின் நொய்ய சொல் – கம்பராமாயண வாசிப்பு

    நண்பர்களே இன்றிலிருந்து தொடர்ந்து ஒரு வருடம் தினம் 30 பாடல்கள் என மொத்த கம்பராமாயணத்தையும் வாசிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். நொய்தின் நொய்ய சொல் எனத் தன் காவியத்தை பற்றி கூறுகிறான் கம்பன். மென்மையை காட்டிலும் மென்மை. அதே  நொய்ய நிறத்த வண்ணத் தும்பியென நான் அச்சொற்களின் மேலெல்லாம் சென்றமர்ந்து சேகரிக்கும் பொன் சிந்தூரப் பொடி உங்களுக்கும் உரித்தானது. என் ரசனைக் குறிப்பை தொடராக வெளியிடவும் முடிவு செய்துளேன். வாரம் ஒரு…

    Continue reading →: நொய்தின் நொய்ய சொல் – கம்பராமாயண வாசிப்பு
  • எங்கிருந்தோ வந்த குருதி

    39எங்கிருந்தோ வந்தகுருதியின் மேல்ஒரு குருதி முளைத்ததுகிளைத்து படர்ந்து நின்ற அதனடியில்குருதி முளைக்காமல் பார்த்துக்கொண்டதுஅக்குருதிமேல்எங்கியிருந்தோ வந்து விழுந்ததுமுளைக்குமொருதுளியினும் துளி பசுங்குருதி 40மரம் போலாவர்மரத்தின் அடிஅமர்ந்தவர்நின்றவர்போனவர்வந்தவர்புணர்ந்தவர்அருந்தவர்

    Continue reading →: எங்கிருந்தோ வந்த குருதி
  • அவரவர் மரமாக நின்றோம்

    36புத்தம்புதிதில் உன்னைசேய்மையில் நின்று பார்த்தேன் நாட் செல்லஅண்மையில் நின்று பார்த்தேன்அன்றொருநாள்உன் அடியில்நாமிருவரும் நின்று பார்த்தோம்பிறிதொருநாள்அவரவர் இடத்தில்அவரவர் மரமாக நின்றோம். 37குடைக்குள்என் இடை வரை இருந்தஉனக்காகஉன் தலை வரை குனிந்துகுட்டியானேன் வெளியிருந்த அனைத்தும்கூடவே குனிந்து குட்டியானது

    Continue reading →: அவரவர் மரமாக நின்றோம்
  •  உனக்காக கூந்தல் சூட்டினேன்

     34 எனக்கேதும் பொருட்டில்லை உனக்காக கூந்தல் சூட்டினேன்எனக்கேதும் பொருட்டில்லைஉனக்காக அணி பூட்டினேன் எனக்கேதும் பொருட்டில்லை உனக்காக உனை கூடினேன் எனக்கேதும் பொருட்டில்லை உனக்காக உனை ஊடினேன் எனக்கேதும் பொருட்டில்லை உனக்காக எனக்கேதும் பொருட்டில்லை35தப்பி விட பார்க்கிறாய்என்னிடமிருந்து நீஎப்பக்கம் திரும்பினாலும் நீஎனக்குஎங்கிருந்து எங்கு தப்பிக்க முடியும் நீஎன்னிடம்

    Continue reading →:  உனக்காக கூந்தல் சூட்டினேன்
  • மரத்திற்கு மரம்

    31நேற்றிலிருந்துஎந்தப் பாட்டுக்கும் கீழே விழாமல் ஆடுகிறதுஆறு வயதேயான பல் 32கண்ட இடத்தில்கழட்டி போடுவதற்கென்றேபாம்பு போட்ட சட்டை ஒன்றைவீட்டில் வைத்திருக்கிறேன்33மரத்திற்கு இலைஇலைமரத்திற்கு வேர்வேர்மரத்திற்கு மரம்மரம்

    Continue reading →: மரத்திற்கு மரம்