-
Continue reading →: அறியாதவள் நீயல்லவா?அறியாத ஒன்றுடன்தனித்து விடப்பட்டவள் நீயல்லவா? ஊர்கமழுமுன் உடல்நிலைநிறுத்த அறியாதவள்நீயல்லவா? பிறந்தவுன் குட்டிகளின்பெயர் அறியாதவள்நீயல்லவா? தின்றவுன் குட்டிகளைசெறிக்கத் தெரியாதவள்நீயல்லவா? அழிந்தவுன் உடலைஅழிப்பதறியாதவள் நீயல்லவா? வருமுன் பிறப்பைமட்டுநிறுத்த அறியாதவள்நீயல்லவா? பிறந்த பின்னிங்குதனித்திருக்க அறியாதவள்நீயல்லவா?
-
Continue reading →: லக்ஷ்மி மணிவண்ணன் முன்னுரை – சூது பவளம் கண்டேன் அல்லேன்(சிலேட் பதிப்பகம் வழியாக வெளியாகும் என்னுடைய முதல் கவிதை தொகுப்பான சூது பவளம் கண்டேன் அல்லேன் என்ற நூலுக்கு கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் அளித்த முன்னுரை) சரளம் பூத்த மலர்கள் வழக்கத்துக்கு மாறான ஒரு நிகழ்வு தென்படுகையில் திகில் உண்டாவது இயல்பு. வி. சங்கரின் கவித்துவ வெளிப்பாட்டை இத்தகையதொரு அனுபவம் எனலாம். அது நிச்சயமாக நவீன கவிதைகளின் வடிவில் இல்லை. ஆனால் அது நவீன கவிதைகள் தருகிற கவிதை அனுபவத்தைத்…
-
Continue reading →: மாசில் மணிவண்ணம் – 6 – நிறை பெற்ற நால்41நின்னதுவோ நிறைமங்களம். கண்டதுவோ கண்காணா மங்களம். கனிவும் முனிவும் நின் ரூபமங்களம். கற்கண்டு தெளிந்த கண்ணாடி நின் நாச்சுவை மங்களம். பொற்கண்டு புண்ணிய காம்பு நின்னரு மங்களம். புற்பூண்டு நிலமே நின்மேனி மங்களம். பொழுதே பொருளே பைங்கருணை நின் பசும்பட்டுக்குழல் மங்களம். அமுதே அழகே ஐயொளிரும் அல்லிக்கனியே மங்களம். செம்பொன் கடலே அருஞ்சொற்றரசே மங்களம். சந்தன குழைவே குங்கும கொழுந்தே சங்கமநிலையே மங்களம். 42களமாய்தம் களத்தில் கண்ணாய்தம்காம்பாய்தம் கனியாய்தம் விரலாய்தம்…
-
Continue reading →: மாசில் மணிவண்ணம் – 5 – நிறை அற்ற நால்37 துகளாயிரம் உகளாயிரம் தீ உண்டது எம் பகலாயிரம் இருளாயிரம். மேனிமேற் தீ கொண்டது மேனியாயிரம். தீமேனி விளைந்ததோர் ஆயிரம் மேனி. பொம்மேனி உருக்கி பொன்னோடையிற்தீம்பொன் முளைத்து பொன் பூத்து பொன் காய்த்து பொன் விழுந்து பொன் குவிந்த பொன்னில் பொன்னளந்தோம் அப்பொன்னுக்கே. 38பொற்சிறத்து புட்சூல் வானவள். பைங்கரத்து புற்சூல் நிலனவள். களிசூல் வெளியவள். சூழ்சூல் நீர்வானத்திடையவள். சூல் காக்கும் புள்ளவள். சூல் நோக்கும் புள்ளவள். சூல் கொண்டவள். சூல்…
-
Continue reading →: சூது பவளம் கண்டேன் அல்லேன் – நூல் வடிவம்அன்புள்ள நண்பர்களுக்கு இந்த சென்னை புத்தக திருவிழாவை முன்னிட்டு என்னுடைய கவிதைகளின் முதல் தொகுப்பு ‘சூது பவளம் கண்டேன் அல்லேன்‘ சிலேட் பிரசுரம் வழியாக வெளியாகவுள்ளது. எனக்கு மகிழ்வும் நிறைவும் சூழ்ந்த நேரம் இது. பிற விவரங்களை வரும் நாட்களில் அறிவிக்கிறேன். நன்றி நூல் பெயர்: சூது பவளம் கண்டேன் அல்லேன் ஆசிரியர்: வி சங்கர் வெளியீடு: சிலேட் பப்ளிகேஷன்ஸ் (slate publications) நூல் கிடைக்குமிடம்: தன்னறம் நூல்வெளி,panuval.com
-
Continue reading →: மாசில் மணிவண்ணம் – 4 – எரிபரந்தெடுத்த பத்து27நம்மிரு காம்பும் நம்மிரு காம்பிற் முட்டி நம்மிருவர் உடைத்து நம்மிருவர் அழித்ததே. கலங்குவதோ கண்ணீர் மலங்குவதோ? தரையில் படுத்து இலங்குவதோ?கருந்தந்தம் தூக்கி வருங்களிறு என் கலம் தன் கை எடுத்தாடுதே.கண்ணயராது காப்பருளிய காம்பின்று என்மேல் கன்னக்கோல் வைத்தாடுதே. 28ஆடுதே என் நாவிற் உன் நா. கண் தேடுதே என்மேலெங்கும் நின்முலை. ஓடுதே என்மேலெங்கும் உன் பிடிக் கைதந்தம். நெஞ்சினை நெரித்ததே நின்னெஞ்சு. இவ்வந்தர ராவில் இவ்விரு நெஞ்சில் நான் என்ன…
-
Continue reading →: மாசில் மணிவண்ணம் – 3 – அழைப்பு விடுத்த ஆறு21மழையரசே குக்கில் உனை கூத் கூத் கூத்தென அழைத்தினை மையரசே செம்பூத்து உனை ஊத் ஊத் ஊத்தென அழைத்தினைவானரசே உன்னிடம் வாங்கி நிறைக்க வையமே தன் கலம் வைத்தினைநிறைகலம் எம் ஊன் எரித்து ஒருவிளக்கு அவள் ஆக்கினை சுடர்மாரிக்கடியில் நான் என்னையே வைத்தினைகொண்டு வருக அவள் காம்பு கொட்டு கொட்டென கொட்டு வருக அவள் சீற்றம் ஆடி வருக அவள் பாதம் தீண வருக அக் கைகாம்பு சூழ்ந்து வருக…
-
Continue reading →: மாசில் மணிவண்ணம் – 2 – வண்ணம் பார்த்த பத்து11கண்ட வண்ணமே கண் வண்ணமே திறந்த வண்ணமே காம்பின் திறல்வண்ணமே திண்வண்ணமேவந்த வண்ணமே ஊறித் திரண்ட வண்ணமேஊன் வண்ணமே உண்ட வண்ணமே கிடந்தது என் வண்ணமே வாயிற் சிவந்த வண்ணமே கொட்டித் தீராப் பைம்பொன் வண்ணமேகொண்டு வருதலெல்லாம் உன் கோன்வண்ணமே12வண்ணமுறு திங்கள் வரும் வண்ணம் ஒரு திசை வண்ணம் தேடித் தவித்திருந்தேன்திங்களொரு வண்ணம் வரும் வண்ணம் என் கண்வண்ணம் கனிந்திருந்தேன் பட்டபகற் வண்ணமதில்எந்த வண்ணம் எந்த வண்ணம் என்றறியாதிருந்தேன். 13தேன்…







