• 1 ஏதென்று அறியாமல்அழ ஆரம்பித்தபோதுசெய்த பிழைகள்ஒவ்வொன்றாக என்னிடம் வந்தன இத்தனைப் பிழைகளா? நான் பார்த்ததேயில்லையே? உலகில் உள்ளோர்உலகில்ஒரு அவரச வேலையெனஅவர்கள் பிழைகளையும்என்னிடம் விட்டுச் சென்றனர் அவர்கள் மனம் திரும்பி வரும் வரைஇந்தப் பிழைகளைஅழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்நான்2அமர்ந்த உன் கோலம்கண்ட பிறகுஎனக்கு வேறு நினைப்பில்லை உலகை மறந்துஒளிந்து வருகிறேன் உன் அருகே உனக்கு முன்பேஉன் முலைக்கண்ஏறிட்டுப்பார்த்து விடுகிறது என்னை அதற்கு முன்பேதொட்டறிவேன் நானதை. 3தோல் துடித்தேன் நான்அறுக்கப்படும் என் தலையை…

    Continue reading →: தொகுதி 2 – வன்னங் கமழ் சுடர்
  • 1காட்டில்அறத்தோன் இல்லைதனித்த ஒரு மீன்கொத்தியின்பாடல் மட்டுமே உள்ளது 2வானேறவோ வழிந்தோடவோநிரம்பித் தவிக்கிறதுநிறைவிளக்கு சுடர் எரியும் திசை என ஏதுமுண்டா? 3காட்டுக் கொடிகளாலானஇந்தக் கூடையைக்கொடுக்க வேண்டியேநான் வந்தேன். திறந்து பார்க்கும் போது நீ எடுக்கஇரண்டு இனிப்புத் துண்டுகள்கூட வைத்தேன். திறந்து பார்க்கும் போதும்நீஅந்தக் கூடையைபார்க்கவில்லை 4என்னிடமுள்ளது நம் கண்ணீர் எந்த விளக்கு மாடத்தில்ஏற்றி வைத்தால்நமக்கு அது எட்டும்? 5ஒரு கூழாங்கல் ஆக விரும்பினேன் நான்மழுங்கியது ஆயினும்கூர் முனை ஏதுமிலாததுநாள்தவறாது நான்ஆற்றில் கிடந்து…

    Continue reading →: தொகுதி 1 – சூதுபவளம் கண்டேன் அல்லேன்
  • வெளி மீபெரிது

    வெளி மீபெரிதுகுருவி நாம்இங்கு வந்தோம் காடு விடுத்து அதில்சிறு வீடு செய்தோம் வீடு விடுத்து அதில்சிற் றகம் செய்தோம் அகம் விடுத்து அதில்சிறு சேக்கை செய்தோம் சேக்கை விடுத்து அதில்சிறு கூடு செய்தோம் குறுகிபடுத்து அதில்சிறு குருவி ஏய்தோம்***என் இல் துடைத்து வைத்திருக்கிறேன்இன்று உன்னை காணவில்லைசிறு விளக்குச் சுடர் ஏற்றியிருக்கிறேன்இன்று உன்னை காணவில்லைமணற்மேடுகளை பார்த்திருக்கிறேன்இன்று உன்னை காணவில்லைஞாயிறும் திங்களும் என் தலை மேல் போட்டிருக்கிறேன்இன்று உன்னை காணவில்லைதேடாத இடம் தேடியிருக்கிறேன்இன்று…

    Continue reading →: வெளி மீபெரிது
  • கவிஞர் மதார் என் கவிதைகள் பற்றி

    நான் விரும்பி வாசிக்கும் கவிஞர்களுள் ஒருவரான மதார் என் கவிதைகளை பற்றிய எழுதிய சிறு குறிப்புடன் நவம்பர் மாத கவிதைகள் இதழில் என் கவிதைகள் வெளிவந்துள்ளன. ஒரே சமயத்தில் பக்தி மற்றும் காதலின் அம்சம் தெரியும் கவிதைகள் என குறிப்பிடுகிறார். அதன் இணைப்பை கீழே அளிக்கிறேன். என்னில் எடுத்தொரு நான் – மதார்

    Continue reading →: கவிஞர் மதார் என் கவிதைகள் பற்றி
  • செத்து மிதந்தன பாதங்கள்

    தேய்த்து தேய்த்து சாணை தீட்டியதில்ஒன்று கூர்மையானதுஒன்று கூழாங்கல்லானது****நாம்வந்த வழியில்செத்து மிதந்தன பாதங்கள்செத்த பாதங்கள் சுமக்க வேண்டியதில்லநடக்க வேண்டியதில்லைபசிக்க வேண்டியதில்லைசாக வேண்டியதில்லைசெத்த பின்அவை வேண்டியதில்லை

    Continue reading →: செத்து மிதந்தன பாதங்கள்
  • வெளியே வருக

    வெளியே வருக உங்கள் பாண்டங்கள்நான் வந்திருக்கிறேன்கொள்க என்னிடம்வெளியே வருக உங்கள் பாடல்நான் வந்திருக்கிறேன்இசைக என்னிடம்வெளியே வருக உங்கள் ஆனந்தம்நான் வந்திருக்கிறேன்கூடுக என்னிடம்வெளியே வருக உங்கள் பாதங்கள்நான் வந்திருக்கிறேன்சேர்க என்னிடம்வெளியே வருக உங்கள் வெளிநான் வந்திருக்கிறேன்வெளியே நம்மிடம்

    Continue reading →: வெளியே வருக
  • அஞ்சுஞ் சுடர்

    அஞ்சுஞ் சுடர் எரியுதடி சின்னஞ் சிறு எனக்குமிஞ்சுஞ் சிரிப்பு மீறுதடி கள்ளங் கனி உனக்குதுஞ்சுஞ் சுரம் தெரியுதடிநெஞ்ச முழு தெனக்குமஞ்சனப் பொழில் ஆவுதடி பிஞ்சு மலர் உனக்குவிஞ்சுஞ் சரம் வீசுதடி வைரத்தடி வில் எனக்குவஞ்சஞ் சீறி வருகுதடி நஞ்சரவ விரல் உனக்குஎஞ்சும் உயிர் ஊறுதடிஎரியுஞ் சீர் எனக்குதஞ்சஞ் சேர்க்க மறுகுதடிதாயின் மார் உனக்குஅம்மம்மா ஆரமுதே வாய்த்ததடி உன்னிருப்புஊடிவரும் என்னரசேவண்ணமடி என்னிருப்புபோதுமடி உன் களி களிப்புகாந்துதடி என் துளி துளிப்பு****”செல்லப்பேறு நீ…

    Continue reading →: அஞ்சுஞ் சுடர்
  • எறும்புகள்

    கூ ட் ட ங் கூ ட் ட மா ய் கூ ட் ட ங் கூ ட் ட மா ய் கூ ட் ட ங் கூ ட் ட மா ய் கூ ட் ட ங் கூ ட் ட மா ய் எங்கிருந்து வருகின்றனஎறும்புகள் கால ங் கால மாய் கால ங் கால மாய்கால ங் கால மாய் கால…

    Continue reading →: எறும்புகள்
  • தால் ஆட்டுதலன்றி

    குருதி வாறஆருனை அடித்தாரோநீ உறங்க தாலே லோமுகமும் வாடஆருனை ஏசினாரோநீ உறங்க தாலே லோமனமுங் கூசஆருனை பேசினாரோநீ உறங்க தாலே லோகுரவளையில்ஆருனை அறுத்தாரோநீ உறங்க தாலே லோஇதெல்லாம் எப்படி செஞ்சாரோசெஞ்சதும் எங்க போய் நின்னாரோஏழ மனம் அவருந்தூங்க தாலே லோதாலே லோ *****இல்லும் இருப்பும் அல்லஅம்மாஊண் ஊட்டுதலன்றி வேறொன்றும் அறிந்திலேன்அறமும் மறமும் அல்லஅம்மாஊஞ்சல் ஆட்டுதலன்றிவேறோன்றும் அறிந்திலேன்சொல்லும் திறமும் அல்லஅம்மாதால் ஆட்டுதலன்றிவேறொன்றும் அறிந்திலேன்நோவும் சாவும் அல்லஅம்மாதுயில் எழுப்புதலன்றிவேறொன்றும் அறிந்திலேன்உருவும் மருவும் அல்லஅம்மாகண்…

    Continue reading →: தால் ஆட்டுதலன்றி