-
Continue reading →: பொங்கி வரும்சுடர் சோதியே3பொங்கி வரும் சுடர் சோதியேசொல்லொன்று தாராயோகாலத்திலிருந்து காலத்திற்குபொங்கி வரும்பெம்பொய்கையேசொல்லிலிருந்து சொல்லுக்குசொல்லிலிருந்து சுடருக்குவழி சொல்லாயோசொல்லோய்ந்து சுடரோய்ந்துஉயிருயிராவது எங்ஙனமென்று எனக்கு அருளாயோ?
-
Continue reading →: வலு ஒழிந்த கைகளெனக்கு1வெறும் அழகை வைத்து வைத்துநிறைத்தேன்உண்ண ஒரு பருக்கை உனக்கு நான் கொண்டு தாராத பொழுது 2தனித்தமர்ந்திருக்கும் உனக்குஏதேனும் தர வேண்டுமோ நான்வலு ஒழிந்த கைகளெனக்குஒருவேளைவிரும்பி நீ கேட்டால்ஒரு சீக்கை அடித்து காண்பிக்க முடியுமோ என்னவோ?
-
Continue reading →: அழகிய மணவாளனுக்கு விருதுநண்பரும் மொழிபெயர்ப்பாளருமான அழகிய மணவாளனுக்கு ரமேஷ் பிரேதன் பெயரிலான சிறிப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். பி. கே. பால கிருஷ்ணன் எழுதிய நாவலெனும் கலைநிகழ்வு எனும் புத்தகத்தையும் வேறு சில கட்டுரைகளையும் மொழிபெயர்த்துள்ளார். தவிர தமிழ் மின்னிதழ்களில் சில கட்டுரைகள் எழுதியுள்ளார்.
-
Continue reading →: ஒக்கலிலிருந்து இறங்க இனி ஒக்குமா59எம்மோ மூச்சில் விளித்தோம் நுமைஉயிரிலினி உடல் நிக்க ஒன்னுமோ அம்மோ வாச்சொல் பாடினோம் நுமைவாயிலினி ஒருவாய் உண்ண ஒன்னுமோ ஊசல் தொட்டு ஆட்டினோம் நுமைஎந்தோளிலினி நும்கை நிக்க வாருமோ காலொடு கால் வைத்து ஆடினோம் கால் இனி மண்ணில் வைக்க ஒக்குமா பொம்மோ பெருவெளி நிறைய வைத்தோம் நுமை விசும்பிலினி வெளி நிக்க ஒன்னுமோ மதலை என தேடிவருவோம் நும்முலை ஒக்கலிலிருந்து இறங்க இனி ஒக்குமா
-
Continue reading →: விண்ணாழியே உனக்கும் ஊசலாட்டு58இன்னில் இன்றில் இம்மைஎந்தே விளித்துகன்னி உனக்கு ஊசலாட்டு ஐயகண் மலைக்கும் உம்மைகண்ணேறு கழித்துகண்ணே உனக்கு ஊசலாட்டு தும்பு இலா பரிபாதம் ஆடுதன்றேமண்ணேறு கழித்துமருவே உனக்கு ஊசலாட்டு புடவி பொய்க்கும் அரு அழகன்றேபுவியேறு கழித்துகன்றே உனக்கு ஊசலாட்டு கொன்னை வாய் ஊதுங்குழலன்றேஎன் ணேறு கழித்துபொன்றாய் உனக்கு ஊசலாட்டு எம்பும் என்னுயிர் சுமந்தலைதினோய்எம் நெஞ்சஞ்சேர்த்துஊசலே உனக்கு ஊசலாட்டு எம்பாவாய் எய்ய விய்யென்றவளை விண்ணிலிருத்தினோய்எங்கொஞ்சல் சேர்த்துகளிகாற்றே உனக்கு ஊசலாட்டு அங்கிருந்து அவளை இங்களித்து வைத்தினோய்வெளி…
-
Continue reading →: அவன் அல்லோ நான்57கால் தூக்கி நீ வைத்திடும் போதில்அவன் கோல் தூக்கி கொன்றிடும் இடை ஓய்ந்து நீ நின்றிடும் போதில்அவன்சடை தோய்ந்து தண்றிடும் அவன்பிறை காய்ந்து வன்றிடும் போதில்உன்நிறை மாந்தி சென்றிடும் தனமொடு தாங்கி நிற்கும் நின் கரிவேழ ஆடம் அவனொடு ஆடி நிற்கும் நின் சிறுங்கன்னி கோலம் காட்டி காட்டிகண் நிறையுஞ் சிறுக்கிஅவன் அறிவேன் நான் அவன் அல்லோ நான்
-
Continue reading →: அல்லம் உன் அடியேன்56செல்லஞ் சிறுகிளியேஅல்லம் உன் அடியேன் துஞ்சி துயில் எழுமதியேஇல்லம் உன் அடியேன் பிஞ்சி பிறிதறியா களவேஅல்லம் உன் அடியேன் கன்னி காதற் செவ்வியேஇல்லம் உன் அடியேன் உன்னி உலகு அளவேஅல்லம் உன் அடியேன் அம்மி ஆமடி அருவேஇல்லம் உன் அடியேன் அடியே அடியேஉன் அடியே..ன்
-
Continue reading →: நங்காய்55உன் இடை வனைதியோ உன் குழல் திருப்புதியோ நங்காய் உன் கைகள் புனைதியோஉன் புவனம் முழுதியோ நங்காய் எரிமேல் வந்து மருட்டுதியோ உரிமேல் வந்து உருட்டுதியோ நங்காய் ஊஞ்சலாடும் உன் பாதம் ஊறு உற்றால் நோகுதியோ நங்காய் பேஞ்சலாடும் என் பிரேமைபெய்யென பெயக்கண்டு சாகுதியோ நங்காய் கண்ட நாள் முதல்பேந்த பேந்த விளிக்குதியோஊந்த ஊந்த விலக்குதியோ நங்காய் நுனி மென்ற நாவினன்சொல்ல ஒரு சொல்லுண்டு நங்காய் (புகைப்படம் : அருண்மொழி)
-
Continue reading →: குழி காணா குழி54குழிக்குள் குழிக்குள் இருந்ததொருகுழி காணா குழி அங்கிருந்துவெளி வெளியாய்வெளி வெளியாய்வெளிவந்தது வெட்டவெளி53புள்ளி புள்ளியாய் விழுங்கிபாம்பானதுபுள்ளி பாம்பாக பாம்பாகநெருங்கி வந்ததுபாம்பை பாம்பு விழுங்கும்புள்ளி






