• மாசில் மணிவண்ணம் – 1 – வழி கேட்ட பத்து

    1மாசில் மணிவண்ணம் எழும் முன்னை எழுந்தேன் என் துகள்வண்ணம்ஆங்கே வாரும் வழியுண்டோகதிரில் உன் கனிவண்ணம் எழும் முன்னை எழுந்தேன்என் நிழல்வண்ணம்ஆங்கே வாரும் வழியுண்டோவழியில் செல்வண்ணம்எழும் முன்னை எழுந்தேன்என் நிறைவண்ணம்ஆங்கே வாரும் வழியுண்டோ2உண்டோ இல்லையோ ஒருங்குதையல்கூறும் முன்னை எழுந்தேன்கண்டோ இல்லையோ கரையும் புள்காணும் முன்னை எழுந்தேன்தீண்டோ இல்லையோ வைகறை திகையும் முன்னை எழுந்தேன்இன்றோ இல்லையோ கண்ணில்கண்டது முன்னை எழுந்தேன் இனிஇலன்3இலன் என்றென்னி இங்கு எம்மை கைவிட்டீரோஉளன் உருகிஉம்மை உரசித் தேய்த்துமருந்துண்டேன் மறந்திட்டீரோகலம்…

    Continue reading →: மாசில் மணிவண்ணம் – 1 – வழி கேட்ட பத்து
  • முத்தி முத்தி

    விண் தடம்மேல் முதலமர்ந்த புள்உனக்கு முத்திவன்முலை மேல்முதலெழுந்த கண்உனக்கு முத்திதண்அலை மேல்முதலிருந்த  நஞ்சேஉனக்கு முத்திகடை கடைந்துகண்டெடுத்த அமுதேஉனக்கு முத்திஊழ் கடந்தெனைஇங்குவைத்த எதுவோஉனக்கு முத்திஒன்றியிருந்துஒன்றை முதலெடுத்தஎனக்கு முத்திஎனைச் சேர்த்தநாமல்லார்க்கும் முத்தி முத்தி

    Continue reading →: முத்தி முத்தி
  • அமுதங் காணீரோ

    தீம்புனல் தேக்கி நிறுத்திதிவ்யம் பல செய்யாழிஅலை கொண்டுவாரும்அமுதங் காணீரோஅலகில் அலகு கோர்த்துஅஞ்சதற்கேதுமின்றிஅருந்தும் புள்குருவிஅமுதங் காணீரோபுவியில் புவி சேர்த்துபுடவி நெய்தெடுக்கும்கண்காணா கடைசல்அமுதங் காணீரோதாலில் தால் வைத்துஉயிர் ஒன்றித்திருக்கும்உண்ணும் ஊண்ஈரஅமுதங் காணீரோகாற்றோடு செவி சேர்த்துதினைவன புள்ளினம்போல்நுழையும் நுண்ரீங்காரங்கோடிஅமுதங் காணீரோஎம் தடந்தேரும் எம்மோரேஅடி அடிக்குஅமுதங் கண்டு குடித்துநிறைநெஞ்சம் நடந்தாளீரோஎடுத்தது எடுத்தாளீரோமடுத்தது மடுத்தாளீரோபுள்ளினங்காள் புவியினங்காள்கல்லினங்காள் களியுயிரினங்காள்கண்விசும்பும் விண்விசும்பின் வெளியினங்காள்பல்லாண்டு பல பல்லாண்டுபாதஞ் சீர் வைத்துமண்ணில் இருந்தருளீரோஓதம் ஓடும் உடற்பாதம் நின்றுபார் நடத்தும் பாழ் அமுதம் பார்த்தருளீரோ

    Continue reading →: அமுதங் காணீரோ
  • தலச்சன்

    தலச்சன் எனக்குகுட்டியெல்லாம்வந்து முடிந்ததும்என் குழியிலிருந்துகடையாகபிறந்ததுசெத்தை நஞ்சு

    Continue reading →: தலச்சன்
  • உன் நெஞ்சாங் குருதி

    தனித்திருக்கத் தெரியுமோஉனக்குகேடு கெட்டதேவெறுங் கெட்ட வார்த்தையோடுதனித்திருப்ப தெப்படியெனத் தெரியுமோஉனக்கு*****என் கொம்பிலும்குளம்பிலும்குத்திக் கிளறிப் பார்த்தேன்உன் நெஞ்சாங் குருதியில்நான் இல்லை

    Continue reading →: உன் நெஞ்சாங் குருதி
  • திக்கு அற்ற காட்டில்

    திக்கு அற்ற காட்டில்நான்என்னைத் துழாவினேன்கைக்குச் சிக்கியதோகழண்டு கிடந்தஒரு கால் குறடு***”ஏய்த்து எனை விட்ட வெளி மேல் போய்த்துப்பினேன்எச்சிக்குஎங்கு போகும்என் சுள்ளி

    Continue reading →: திக்கு அற்ற காட்டில்
  • எம்மோடு நிற்கக் கண்டோம் இல்லை

    முதலில் கை பொத்திபுத்தகத்திலிருந்த கரடிக் குட்டிகளைவளர்த்த நீ எடுத்துக்கொண்டாய்பக்கத்தில் வளர்ந்திருந்தஜோடி நரிகளேமிஞ்சியது எனக்குவரும் நாட்களில்என் நரிகள்குட்டி போடுமென்பதால்உன் கரடிக் குட்டிகளையும்சேர்ந்தே வளர்க்க முடிவு செய்தோம்நாம்**** விசும்பு வானம்எம்மோடு நிற்கக் கண்டோம் இல்லை நீல நிறத்திடை நாம் இருந்தோம் இல்லைஅகலும் நிலத்திடைசூழ சுடர்ந்தோம் இல்லைஎங்கெங்கு காணினும்சூறை அங்கெங்கும்நம் பாதம்நின்றோம் இல்லைஆற்றியிருந்து என் அடுத்த பாதம் எடுத்தபோது நம்மில் நாம் இல்லை

    Continue reading →: எம்மோடு நிற்கக் கண்டோம் இல்லை
  • வன்னங்கமழ் சுடர்

    வெறுந்தீயில்வர்ணந் திகழ் சுடர் வரைந்தினேன்மரிக்குந்திரியில்வன்னங் கமழ் சுடர் பொருந்தினேன்அலையுந்தருவாயில் தேம்பியுந்தன்கன்னங் கருஞ்சுடர் புகுந்தினேன்திகழென திகழுமுந்தன் சுடர்காணுமந்த கண்ணுஞ் சுடர் இழந்தினேன்தோற்றமோ காட்டிலனய்தேற்றவோ வந்திலனய்ஆற்றவோ இருந்திலனய்ஏற்றி ஏற்றி எரிக்குமெந்தன் சுடர்எனையே அறிந்திலனய்தெற்றெதுவோ தெரிந்திலனய்மற்றெதுவோ மறந்திலனய்உற்றெதுவோ உறந்திலனய்பெற்றெதுவோ பெற்றிலனய்இற்றெதுவோ இரந்திலனய்சுட்டுஞ் சுடரதுவோஎட்டுஞ் சுடரெதுவோஈயினும்எற்றெதுவோ நிறைந்திலனய்

    Continue reading →: வன்னங்கமழ் சுடர்
  • 1வெறும் அழகை வைத்து வைத்துநிறைத்தேன்உண்ண ஒரு பருக்கை உனக்கு நான் கொண்டு தாராத பொழுது 2தனித்தமர்ந்திருக்கும் உனக்குஏதேனும் தர வேண்டுமோ நான்வலு ஒழிந்த கைகளெனக்குஒருவேளைவிரும்பி நீ கேட்டால்ஒரு சீக்கை அடித்துக் காண்பிக்க முடியுமோ என்னவோ?3பொங்கி வரும் சுடர் சோதியேசொல்லொன்று தாராயோகாலத்திலிருந்து காலத்திற்குபொங்கி வரும்பெம்பொய்கையேசொல்லிலிருந்து சொல்லுக்குசொல்லிலிருந்து சுடருக்குவழி சொல்லாயோசொல்லோய்ந்து சுடரோய்ந்துஉயிருயிராவது எங்ஙனமென்று எனக்கு அருளாயோ? 4இவ்வாழி உயிர் உனக்குஅளித்ததென்னஅறிய வேம் நான்ஆதியாதி உயிர் உன்னிடம்பெற்றதென்னபெறிய வேம் நான்உனை உசாவ வந்தேம்ஈயாமலெங்குஞ் செல்ல…

    Continue reading →: தொகுதி 3 – தன் தோலையே இசைத்தாடும் உயிர்