-
Continue reading →: சொல் மீது பறந்து தன் ஊழ் நடத்தும் புட்கள்32கேட்பதற்கென அணி செய்யப்படும்காதுகளுக்குப்பாடுதற்குக் குரலேதுமில்லைபல்லாயிரம் ஆண்டுகளாய்தன் பறை அதிர்வைத்தான் கேட்டுஅமர்ந்திருக்கிறது செவி. 33நாமென்று எப்படிச் சொல்லுவேன்? நாமெல்லாரும்தனித்துத் திரியும் நீள் அடருங்காட்டில்நாமென்று எப்படிச் சொல்லுவேன்? இத்துணை பேசியும்மிஞ்சிய அவ்வொரு சொல்மேல் பறந்துதன் ஊழ் நடத்தும் புட்களிடம்
-
Continue reading →: துள்ளுங்கடல்30மீனிருந்த உள்ளங்கைதுள்ளுங்கடல் தாங்கும் நிலமன்றோ?31பறந்து வந்துநீயமர்ந்த தோளினால்நானொரு நிழல்தரு சிறுமரம்
-
Continue reading →: நீ கொள்க அன்னம்28வெகுநேர்த்தியாய்அலகில் அன்னம் அளிக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன்இருந்தும்உன் எச்சத்தைச் சுமந்து செல்லஓர் அலகில்லை எனக்கு29வான் நோக்கிஉன்னையே திறந்தநீகொள்க அன்னம்
-
Continue reading →: இச்சிறு புள்சத்தம்26இச்சிறு புள்சத்தம்எனை நோக்கியது அல்ல. ஆயின்அக்குரல் எனைஒற்றைக்கு விட முடியுமா? 27பழந்தின்ற ஒரு குருவிஎன் வீட்டிற்கு வெளியே நிற்கிறதுஇன்றதன்வயிறு நிறையபழம் காய்த்திருக்கிறது
-
Continue reading →: இவ்வாடை அழுக்கேறியதுஇவ்வாடைஅழுக்கேறியது உலகின் நின்கரம் தீண ஒப்பாதது உன் முன் நிற்கையில்என் வெட்ட வெளிஇல்லாமலாக்குவது இவ்வாடை நீ அருளியது நம் இடைவெளிஇல்லாமலாக்குவது இவ்வாடைநம்மிருவர் அழுக்கேறியது
-
Continue reading →: எவ்வானம்23கதவைகற்களால் செய்திருந்தாய்எத்தனைக் காலம்அக் கல்வீட்டின் வெளியே காத்து நின்றிருப்பதுநான்24எவ்வண்ணம்எவ்வண்ணம்தூக்கிப் பறக்கிறது வானில்எவ்வானம்எவ்வானம்கூடிக் களிக்கிறது அவ்வானில்
-
Continue reading →: நின் சிற்சுனை21நீட்டிய கைகளின் அளவறியஎன் சிறுசுனையிலிருந்து ஒருகை அள்ளி பருகுநான் என்றுமே வற்றியதில்லை 22இறைவநின் சிற்சுனையில்ஒருகை அள்ளி கண் ஒத்தினேன்கைநிறைந்தும்கண் ஒழிந்த பாடில்லை அச்சுனை
-
Continue reading →: குருவி வருமென காத்திருக்கும் குருவி19குறுக்கிப் படுத்துப்போர்த்திக் கொண்டால்நானொரு குருவியின் முட்டைகுருவியோ ரொம்பப் பெரிய குருவிஆயினும்நானொருகுருவி வருமென தூங்காதிருக்கும் குருவி20உனக்கொரு கவளம்எனக்கொரு தானியம்அன்றன்றைக்குக் கொய்திட்டால்மீந்த நேரம் முழுக்க வான் கிளை அமர்ந்துஎத்துணை கதை பேசலாம்
-
Continue reading →: காலச்சுவடு இதழில் என் கவிதைகள்2026 பிப்ரவரி மாத காலச்சுவடு இதழில் தமிழ் கவிதைகளில் நிகழ்ந்து வரும் மாற்றங்களின் முகமாக 6 கவிஞர்கள் 20 கவிதைகள் எனும் அடிப்படைப்பில் என் கவிதைகளும் வெளிவந்துள்ளன. கவிதைகளை வாசிக்க



