• சுடரே பொருத்தும் சுடர்

    4 முலைத்திரிதேடித் துழாவுஞ் சுடர் திரியோகன்னங் கருஞ்சுடர் சுடரே பொருத்தும் சுடர் **** எனக்காகமிருது மிருதுவெனமிருது சேர்த்த தனம்தன் தலைப்பில் வைத்திருந்ததுஒரு குன்றிமணி

    Continue reading →: சுடரே பொருத்தும் சுடர்
  • மதாருக்கு நன்றி

    சூது பவளம் கண்டேன் அல்லேன் நூலுக்கு அழகிய பின்னட்டை குறிப்பை வழங்கிய சமகால கவிஞரான மதார் அவர்களுக்கு என் நன்றி. மதாரின் குறிப்பு மரபார்ந்த சொல்லாட்சிகள் நவீனக் கவிதைக்குள் வரும்போது கவிதை முறுக்கேறி உரத்து ஒலிப்பதற்கான வாய்ப்புண்டு. மாறாக, வி.சங்கரின் கவிதைகள் அமைதியை அடைகின்றன. மரபின் உருவேற்றம் பெற்று உறைந்திருக்கும் சொற்கள் இவரது கவிதைகளில் உருகியோடும் நீரோட்டமாகின்றன. அதன் சிற்றலைகள் எழுப்பும் ஓசைகள் ஜலதரங்கமாய் மயக்குகின்றன. மதார்

    Continue reading →: மதாருக்கு நன்றி
  • சூது பவளம் கண்டேன் அல்லேன் நூலுக்கு என் குறிப்பு

    கவிஞன் ஒருவனும் அல்லன் ஒரு கவிப்பார்வை முளைத்து மெல்ல மெல்ல வளர்ந்து மரமாகி பூவெடுக்கும் சித்திரம் இந்நூலில் உள்ளது. கனிந்துள்ளதா அம்மரம் என்று காலம் சொல்லும். இல்லையென்றால் பின்னாளில் கனியலாம். ஒருவேளை மரம் என்பதற்கு மரம் போதும் என்ற காலம் கனிந்துவிட்டதா?  அம்மரமோ, வெயில்தேடி தம் கதி மாற்றிய பல்வேறு கிளைகளுடன் உள்ளது. ஆயினும் அதன் அடி ஒன்றே.  ஒவ்வொரு கிளையும் எதிரெதிர் திசையில் எழுந்தாலும் மரமெங்கும் மலர் கமழ் ஒன்றே. எதனொன்றின்…

    Continue reading →: சூது பவளம் கண்டேன் அல்லேன் நூலுக்கு என் குறிப்பு
  • என் பேரில்

    வரிசையில்எங்கெங்கோ இருந்த எழுத்துகள்என் பேரில்சேர்நது கொண்டன

    Continue reading →: என் பேரில்
  • அறியாதவள் நீயல்லவா?

    அறியாத ஒன்றுடன்தனித்து விடப்பட்டவள் நீயல்லவா?  ஊர்கமழுமுன் உடல்நிலைநிறுத்த அறியாதவள்நீயல்லவா?  பிறந்தவுன் குட்டிகளின்பெயர் அறியாதவள்நீயல்லவா?  தின்றவுன் குட்டிகளைசெறிக்கத் தெரியாதவள்நீயல்லவா?  அழிந்தவுன் உடலைஅழிப்பதறியாதவள் நீயல்லவா?  வருமுன் பிறப்பைமட்டுநிறுத்த அறியாதவள்நீயல்லவா?  பிறந்த பின்னிங்குதனித்திருக்க அறியாதவள்நீயல்லவா?    

    Continue reading →: அறியாதவள் நீயல்லவா?
  • லக்ஷ்மி மணிவண்ணன் முன்னுரை – சூது பவளம் கண்டேன் அல்லேன்

    (சிலேட் பதிப்பகம் வழியாக வெளியாகும் என்னுடைய முதல் கவிதை தொகுப்பான சூது பவளம் கண்டேன் அல்லேன் என்ற நூலுக்கு கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் அளித்த முன்னுரை) சரளம் பூத்த மலர்கள் வழக்கத்துக்கு மாறான ஒரு நிகழ்வு தென்படுகையில் திகில் உண்டாவது இயல்பு. வி. சங்கரின் கவித்துவ வெளிப்பாட்டை இத்தகையதொரு அனுபவம் எனலாம். அது நிச்சயமாக நவீன கவிதைகளின் வடிவில் இல்லை. ஆனால் அது நவீன கவிதைகள் தருகிற கவிதை அனுபவத்தைத்…

    Continue reading →: லக்ஷ்மி மணிவண்ணன் முன்னுரை – சூது பவளம் கண்டேன் அல்லேன்
  • மாசில் மணிவண்ணம் – 6 – நிறை பெற்ற நால்

    41நின்னதுவோ நிறைமங்களம். கண்டதுவோ கண்காணா மங்களம். கனிவும் முனிவும் நின் ரூபமங்களம். கற்கண்டு தெளிந்த கண்ணாடி நின் நாச்சுவை மங்களம். பொற்கண்டு புண்ணிய காம்பு நின்னரு மங்களம். புற்பூண்டு நிலமே நின்மேனி மங்களம். பொழுதே பொருளே பைங்கருணை நின் பசும்பட்டுக்குழல் மங்களம். அமுதே அழகே ஐயொளிரும் அல்லிக்கனியே மங்களம். செம்பொன் கடலே அருஞ்சொற்றரசே மங்களம். சந்தன குழைவே குங்கும கொழுந்தே சங்கமநிலையே மங்களம். 42களமாய்தம் களத்தில் கண்ணாய்தம்காம்பாய்தம் கனியாய்தம் விரலாய்தம்…

    Continue reading →: மாசில் மணிவண்ணம் – 6 – நிறை பெற்ற நால்
  • மாசில் மணிவண்ணம் – 5 – நிறை அற்ற நால்

    37 துகளாயிரம் உகளாயிரம் தீ உண்டது எம் பகலாயிரம் இருளாயிரம். மேனிமேற் தீ கொண்டது மேனியாயிரம். தீமேனி விளைந்ததோர் ஆயிரம் மேனி. பொம்மேனி உருக்கி பொன்னோடையிற்தீம்பொன் முளைத்து பொன் பூத்து பொன் காய்த்து பொன் விழுந்து பொன் குவிந்த பொன்னில் பொன்னளந்தோம் அப்பொன்னுக்கே. 38பொற்சிறத்து புட்சூல் வானவள். பைங்கரத்து புற்சூல் நிலனவள். களிசூல் வெளியவள். சூழ்சூல் நீர்வானத்திடையவள். சூல் காக்கும் புள்ளவள். சூல் நோக்கும் புள்ளவள். சூல் கொண்டவள். சூல்…

    Continue reading →: மாசில் மணிவண்ணம் – 5 – நிறை அற்ற நால்
  • சூது பவளம் கண்டேன் அல்லேன் – நூல் வடிவம்

    அன்புள்ள நண்பர்களுக்கு இந்த சென்னை புத்தக திருவிழாவை முன்னிட்டு என்னுடைய கவிதைகளின் முதல் தொகுப்பு ‘சூது பவளம் கண்டேன் அல்லேன்‘ சிலேட் பிரசுரம் வழியாக வெளியாகவுள்ளது. எனக்கு  மகிழ்வும் நிறைவும் சூழ்ந்த நேரம் இது. பிற விவரங்களை வரும் நாட்களில் அறிவிக்கிறேன். நன்றி நூல் பெயர்: சூது பவளம் கண்டேன் அல்லேன் ஆசிரியர்: வி சங்கர் வெளியீடு: சிலேட் பப்ளிகேஷன்ஸ் (slate publications) நூல் கிடைக்குமிடம்: தன்னறம் நூல்வெளி,panuval.com

    Continue reading →: சூது பவளம் கண்டேன் அல்லேன் – நூல் வடிவம்