• கம்பராமாயண வாசிப்பு பற்றி – மீண்டும்

    நாம் ஒன்றை கனவு காணும் போது நம்மை ஊதிப் பெருக்குகிறோம். சரி நாமல்ல நான். ஒரு நாளைக்கு 30 பாடல்கள் வீதம் ஒரு வருடத்தில் கம்பராமாயணத்தை முடிக்க வேண்டும் என நினைத்து இந்த தளத்தில் ஏற்கனவே அறிவித்திருந்தேன். இது உடனே படித்தாக வேண்டும் என்ற என் அவசரமும் அதன் பின்னுள்ள நானே பெருக்கி கொண்ட என் ஆணவமுமே (அல்லது தன்முனைப்பு)  என இன்று தோன்றுகிறது. தினம் 30 பாடல்களை படித்து…

    Continue reading →: கம்பராமாயண வாசிப்பு பற்றி – மீண்டும்
  • குனித்த செஞ்சாந்துநிற குருவி

    51தணிந்த மென்பஞ்சு சேக்கை உன் தனம் குனித்த செஞ்சாந்துநிற குருவிநான் அங்கே பறக்க அறிகிலேன்பசியும் மறக்கிலேன் உண்டு உண்டுஉன் சூட்டில்கண் வளர்த்தேன் சிறகு விரிந்த அவ்வேளை உடல் உந்திஆகாயமடைந்தேன் நான்52சர்ப்ப பூஜங்களின் மேல்சாய்ந்தாடும் கூந்தற்குழவி நாகம் முலையினின்று கருநாக்கு நீட்டி நிற்கும் நச்சரவம் அஞ்சுதலை விரித்துமுத்தாடும் கைபூஜங்கம் வீரிய விடம்சுருண்டு படுத்துறுங்கும்ஈரங்காந்தும் மணிப்பூரம் இடையில் பத்தி விரித்துசிவக்கும்பாதாள ரூபம் இவ் ஆலம் மேல்கொடி சுற்றி அமுது கோத்து நெரிக்கும்என் கால…

    Continue reading →: குனித்த செஞ்சாந்துநிற குருவி
  • அறமின்றி அமையாது அறம்

    49வீட்டிற்கும் ஆகாயத்திற்கும்ஓர் ஊஞ்சல்அன்றாடம் ஆடி வருகிறதுஎன் குருவிவீட்டில் வீடோஆகாயத்தில் வீடோஅறியேன் நான்என் செய்வேன்இன்றெங்கும் திரும்பவில்லையேஎன் குருவி50வானும் நீரும் அற்று அல்லால்அறமின்றி அமையாது அறம்

    Continue reading →: அறமின்றி அமையாது அறம்
  • ஜேன் குடால் நினைவிற்கு முத்தம்

    ஜேன் குடால் (Jane Goodall) அக்டோபர் 1 2025 அன்று இயற்கையாக மரணமெய்தினர். அவருக்கு அஞ்சலி. விலங்கியலாளர் மற்றும் முதனியலாளராக (primatologist)  அவருடைய சிம்பன்ஸிகளின் உணர்வு நிலைகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் தரவுகள் மிகவும் முன்னோடியானது. மிக இளம் வயதிலேயே தன் தந்தை பரிசளித்த ஜூப்லி எனும் குரங்குகுட்டி பொம்மையை சுற்றத்தார் ஜேன் அப்பொம்மையால் பயந்து விடக் கூடு மென் நினைத்தபோது அவர் அதை மகிழ்ந்து ஏற்றார். ரஸ்டி எனும் தன்…

    Continue reading →: ஜேன் குடால் நினைவிற்கு முத்தம்
  • நம் தோல் நம்மை

    47நம் தோல் நம்மை தழுவியதுநம் தோல் நம்மை தடைத்தியதுநம் தோல் நம்மை போர்த்தியதுநம் தோல் நம்மை குளிர்த்தியதுநம் தோல் நம்மை துளைத்தியது48கைமாறி கைமாறிஎன்னிடம் வந்தேன் நான்என் கையிலிருந்ததுஅத்தனை ரேகை

    Continue reading →: நம் தோல் நம்மை
  • அல்லேம் அதுவும் அல்லேம்

    44எப்பொருட்டினும்நானிங்கு வந்திலேன் இங்கிருந்தேன்நானிங்கு வந்திலேன்45 இவ்வுலகை காத்தேன்இவ்வுலகம் கொன்று புசித்துஇவ்வுலகை காத்தேன்இன்றில்லேல் அன்றில்லேல்இவ்வுலகம் கொன்று புசிக்கவெனஇவ்வுலகை காத்தேன் 46 விரிதிருமண்ணும் அல்லேம்சூழ்திருவானும் அல்லேம்காற்றும் அல்லேம்கனியும் அல்லேம்சொல்லும் அல்லேம்சுடரும் அல்லேம்என்னும் அல்லேம்உன்னும் அல்லேம்ஏனிந்த பாடோ அம்மாஅல்லல் அல்லேம் அல்லேம் அன்றிவேறேதும் அல்லேம்அல்லேம் அதுவும் அல்லேம்

    Continue reading →: அல்லேம் அதுவும் அல்லேம்
  • சந்திரிகா லயம் சேர்த்த சங்கீதம்

    வானப்ரஸ்தம் எனும் மலையாள திரைப்படத்தின் காமினி என்னும் பாடலை நேற்றிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்பாடலின் சமஸ்கிருத சொல்லாட்சிகள் பாடலாக கேட்கும்போது ஒருவித மயக்கத்தை அளிப்பவை. சந்திரிகா லயம் சேர்த்த சங்கீதம் ஆலிங்கனம். சுபத்தரையை சந்திக்கும் அர்ஜுனன் பாடுவது. இப்படத்தில் அர்ஜுன வேடமிடும் கதகளி கலைஞனாக நாயகன். கதகளியில் தோன்றும் அவ்வர்ஜுனனை மட்டுமே காதலிக்கும் உயர் குடி பெண்ணான நாயகி (சுபத்தரை என பெயர் கொண்டவள்) அவன் அவ்வேடத்திலிருக்கும் போதே உறவு…

    Continue reading →: சந்திரிகா லயம் சேர்த்த சங்கீதம்
  • ஓர் ஜுகல் பந்தி

    41அண்டையர்களிடம்நீயும்உன் கூட்டமும்நெஞ்சு நிமிர்த்திஇரு றெக்கை விரித்துதத்தி தாவிகீச்சலிடுவதுநீயல்லாதவர்க்குஓர் ஜுகல் பந்தி 42 என்னோடுவிரிந்து நின்ற உனக்குதர முடிந்ததெல்லாமொருமுத்தந்தான்43 தூங்கிவிட்டதெனநடிக்கும் இலையில் தொட்டால் சிணுங்கி எழுகிறது

    Continue reading →: ஓர் ஜுகல் பந்தி
  • காத்து நின்றதன் எச்சம்

    41ஓசையில்லாமல்கைகள் குவித்துஉடல் குறுக்கிஓர் ஓர் அடியாககால் வைத்துவிருட்டென பறந்ததுநாம் 42நம் சந்திப்பு புள்ளியில் நீகாத்து நின்றதன்எச்சம்பறந்து சென்றிருந்தது நீபறந்து சென்றதன் எச்சம்காத்து நின்றிருந்தது

    Continue reading →: காத்து நின்றதன் எச்சம்